பதின் பருவம் முதலே மணிரத்தினத்துக்கும் எனக்கும் பிரியமும் வெறுப்புமான உறவிருந்து வந்தது.நேற்று ராவணன் பார்க்கச் சென்ற பொது கூட அதிகம் எதிர்பார்ப்பில்லாத மனநிலையோடு தான் சென்றேன்.மணியின் “மௌன ராக”த்தில் மயக்கம் கொண்டுவிட்டிருந்த நான்…”நாயகனி”டத்தும் “அக்னி நட்சத்திரத்”திலும் காதலே கொண்டு விட்டேன்!

ஆனால் நான் வளர வளர என் காதல் வெளிறத் துவங்கி விட்டதையும் கண்ணுற்றேன்…அது மணீஷாவின் பர்தாவுக்குள் சிக்கிக்கொண்டு விட்ட சந்தேகத்தில்…”நான் சற்றே விலகி இருந்து விட்டேன் பிள்ளாய்”!…”

அலைபாயுதே”, மணி பற்றின அழகிய நினைவலைகளை என் மீது அள்ளித்தெறித்தது என்றாலும்..மணியிடம்..”அதிகம் எதிர்பார்க்கவில்லை என் சுபாவம்”..”குரு”வும் “இருவரும்” மணியை தேர்ந்த இயக்குநராக காட்டினாலும், கடந்த பத்தாண்டுகளில் அவர் என்னைப் பெரிதாக கவர்ந்து விடவில்

நல்லவேளையாக ராமாயணத்தின் அச்சாக இல்லை “ராவணன்”.

ப்ரித்திவிராஜின் மனைவி ஐசை கடத்திவிடுவதாலேயே ராவணன் ஆகிறார் விக்ரம்,மனைவி கடத்தப்பட்ட காரணத்தினாலேயே ராம அவதாரம் ப்ரித்விக்கு(மக்கா…ராமனாவ ஆசையா?சம்சாரத்த தார வாத்துடு பா!!! சும்மா ரெண்டு நல்லது நடக்கும் பாரு! ஒண்ணு நீ தான் ராமன்!ரெண்டு…சம்சார்த்து கைலேர்ந்து விடுதல!)கடத்தலுக்கு ஆளாக்கப்படும் காரணத்தினாலேயே சீதையாக ஐஸ்.

இந்தக் கடத்தல் சமாச்சாரம் தவிர புராணக்கதைக்கும் திரைக் கதைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, இல்லை….இல்லவேயில்லை…
விக்ரம்…ஒரு..1*நக்சலைட் 2*தீவிரவாதி 3*கடத்தல்மன்னன் 4*ராபின் ஹூட் 5*ஒரு பழங்குடி ரௌடி…இப்படியாக விநியோகஸ்த்தர்கள் ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் …ஏனென்றால்..ஒரு எஸ்பி யால் விக்ரம் இத்தனை தீவிரமாக தேடப் படுவதற்கான காரணம் “நீங்க தேடினாலும் கிடைக்காது”!(
எஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்ட்டர் ரோல்கள் தமிழ்சினிமாத் துறைக்கு
புளித்து விட்டன போலும்!..ரசிகர்களின் தலையெழுத்து மாறவில்லை…சாக்லேட் பாத்திரங்களில் பார்த்தே பழகி விட்ட ப்ரித்வியை எந்த தோற்ற மாற்றமும் இல்லாமல் எஸ்பி யாக ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது!)
திரைக்கதையில் இல்லாத திருப்பங்களை ஈடு செய்யவோ என்னவோ விக்ரம் ஐஸிடம் பேசும் போதெல்லாம் முகத்தசைகளில் ஏகப்பட்ட திருப்பங்களைக் காட்டுகிறார்…அதோடு சில பல குண்டுகளை போலிஸ் ஜீப்புகளில் எறிந்து கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்கிறார்!அவர் நல்லவரா கெட்டவரா என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப் பட்டால்?…நாயக பாணியிலேயே “தெரியலேயேப்பா” என்பதைத் தவிர வேறென்ன பதில் சொல்ல முடியும் இயக்குநர்?

தன் தம்பியைக் கொன்ற ப்ரித்வியை காப்பாற்றியதால் தங்கை கணவனின் கையைச் சீவும் கணவான் விக்ரம், கடத்திவைக்கப் பட்டிருக்கும் ஐஸின் மீது மலரும் காதலை பார்வையினால் தவிர வேறெப்படியும் வெளிப்படுத்தவில்லை!

மரியாதைக்குரிய மனைவி ஐஸ் தன் கண்ணியத்தைக் கட்டிக் காக்கிறார்,விக்ரம் மீது அரைக் கண் பார்வைகளை அள்ளி வீசியபடியே!

ஹனுமனாக கார்த
திக்!

மனிதனுக்கு பழைய கவர்ச்சி அப்படியே இருக்கிறது. அறிமுகக் காட்சியில் அவர் பாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடுகிறது…ஆனால்..ராமனே திரைக்கதையின் குழப்பத்தில் சிக்கியிருக்கும் போது ஹனுமன் பாவம் என்ன தான் செய்ய முடியும்?

விக்ரமும் ப்ரித்வியும் மோதும் வரை ராமாயணமாக நகரும் கதை,பிறகு மணிரத்ணமாயமாக நாமகரணம் சூட்டிக்கொள்கிறது! மீட்கப்படும் ஐஸை ப்ரித்வி சந்தேகிக்க..ஐஸ் விக்ரமை நாடி வர…ராமன் ராவணனைக் கொல்ல…(ஆவ்வ்வ்….)…கதை (அ)சுபமாய் முடிகிறது.
எப்போதும் போல தன்னிச்சையான (பிதா மகன்,அன்னியன்)கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார் விக்ரம்,ஐஸ்.. கவர்ச்சி சீதை வேடத்தில் கச்சிதமாய்ப் பொருந்த,ப்ரித்வி ஐயோ பாவம் ரகம்..நிற்க..அகோ..நண்பர்காள்…கற்பழிக்கப் பட வேண்டிய கதா பாத்திரமா?கூப்பிடுங்கள் ப்ரியாமணியை!(நீங்களூமா மணீ)சத்தியராஜ் ரேப் ராஜ் என்றழைக்கப்பட்டது போல் பட்டம் ஏதும் ப்ரியாவுக்கு வழங்கப்படாதிருந்தால் சரி தான்!

படத்தின் போது ஏற்பட்ட ஒரே ஹாஸ்ய அனுபவம்..ரஞ்சிதா திரையில் தோன்றிய போதெல்லாம் ரசிகர்களில் ஒரு கூட்டத்தினர், நித்தியானந்தாவை அழைத்தது தான்!

ஆஸ்கர் நாயகனை இசை அமைக்க வைத்து,அது ரசிகர்களின் காதுகளையே எட்ட விடாமல் நடிகர்களின் வசனம் ஏன் மணி?மணீரத்தினத்தின் படங்களுக்கே உரிய பளிச் வசனங்கள்!தொழில் நுட்பத்துக்காகவும்,காமிரா கோணங்களுக்காகவும் படத்தின் கதாநாயகன் சந்தோஷ் சிவம் தான்.
நல்ல படமா அல்லதா என்ற கேள்விக்கான் பதில்…தொழில்நுட்பம்,ஐஸின் அழகு,ஏஆரின் இசை, விக்ரமின் வசன உச்சரிப்பு…இவை நோக்கின் பார்க்கலாம் என்பது! குழப்பமில்லாத திரைக்கதையையும்,தடையற்ற கதைப் போக்கையும் எதிர்பார்க்காமல் சென்றால் பார்க்கலாம்…

ராவணன் நாம் மெய்சிலிர்க்கும் படியாக ஏதோ செய்து விடப் போகிறார் என்ற எதிர்பார்ப்ப்லேயே உறங்கி…கும்பகர்ணனின் அவதாரமாகிடாதே தலைவா பாத்து!!!

ஆங்கிலத்தில் அபி…
தமிழாக்கம்..ஷஹி…

Advertisements