யாரென்பதும் தெரியாமல்…
இருப்பிடமும் புரியாமல்..
இதென்ன என் பிழைப்பு..
மேலும் கீழுமாய் எட்டித்தவித்த படி…

பார்வையைத் தழுவும் இதென்ன?
அழகிய ஓர் சிகப்பு ரோஜா!
கண்களைக் கவரும் அதன் அருகில் நானா?
இலைகளும் கிளைகளும் சூழும் நான்….
ஒரு… கரிய முள்!

உடன் வளர்ந்தோம் நானும் அவளும்..
பார்வைப் பரிமாற்றங்களோடு…
வார்த்தைகளும்..உள்ளப் பின்னல்களுமாய்..

என் வலிமையோடு ..வளர்ந்ததவள்..மென்மை..
தென்றல் வந்து சேர்த்ததெமை…உண்மை!

அவள் மென்மை வென்றது என் வன்மையை…
அன்பு கொண்டு ஆராதித்தேன் அவள் பெண்மையை..

“நீ இல்லாது வாழ்விலை” என்றனள்…
எனக்காக உயிர் சுமந்த என் மென்மையள்..

அன்போடு கர்வத்தையும் என்னுள் விதைத்தனள்…
மாறாக் காதலினால் என்னைக் குளிர்வித்தாள்!

உலகினோர் உச்சியில் வாழ்ந்த்திட்டோம்..
சேர்ப்பித்தது எங்களை கிளைகளோடு காதலும்!

கதிரொளி ஒளிர்ந்தது எங்களில்….
நாங்கள்..
அழகிய ஓர் செம் பூவும்…கரிய ஒரு வன்முள்ளும்!

காதல் கிரணங்களில் குளிர்காய்ந்தோம்…
எதிர்காலம் என்பதெதற்கு?
இக்கணமே இன்பமென்றிருந்தோம்!

பின்னொரு நாளில்…
“அழகி உனக்கான இடமல்ல இது..
ஆராதனை செய்வருனைச் செல்” என நின்றேன்..

பறிக்க வந்தாரொருவர்…பார்த்தனள் ரோஜா..
“அன்பே வா செல்வோம்” என்றனள்…

“நீ இல்லாமல் நானேது” என்றனள்..ரோஜா!
இனி வேறெது வேண்டுமெனக்கு?நானே ராஜா!!

கொய்யப் பட்டுக் கிடந்தோம் இருவரும் கட்டுண்டு..
அன்பினால்…
இயற்கையை வெல்லவியலாமல் குத்தினேன்..
பறித்தவர் கைகளை…

வலியினால் பதறி ஒடித்தார் எனை…
தனியனானேன் பாவி நான்!
அழகி சென்றனள் அவரோடு…

சென்று வா என் செல்லக்கிளி…
வென்று வாழ் உலகை…
தனிமையில் தரையில் கிடந்தாலும்..
என்னுயிர் உன்னோடு பின்னோடும்!!!
மொழியாக்கம்..ஷஹி..

Advertisements