கதை பிறந்த சூழல்….இரண்டாவதும் பெண்ணாய்ப் பிறந்த மருத்துவமனை அறை…

பிரசவத்தின் பெருவலியா?புதிதாய்ப் பிறந்த பிஞ்சை வரவேற்கத் தயாராய் இல்லாத உலகின் துயரா எதில் வேதனை அதிகம் என என்னுள் விவாதித்தபடி…..
நான்!

“ரெண்டாவதும் பொண்ணாப் போச்சே! ஒன் மாமியாவுக்கு யாருடீ சேதி சொல்ல?”
….அம்மா!

“மொத புள்ளைக்கி மொட்ட போட்டு காது குத்துன கடனே இன்னும் அடையல இதுல இதுவும் பொண்ணா?”….
அப்பா!

“நாலாம் மாசமே ஒனக்கு தெரியும்டீ பொட்டப் புள்ளன்னு..சொல்லாம கவுத்துட்டியேடி என்ன”…..
கணவன்!

“ஹைய்யா! அப்பா இந்த வருசம் நான் பள்ளிக்கூடம் போயிட்டா, ஒனக்கு முதுகு தேய்க்க ஆள் இல்லேன்னு சொன்னியே…இதோ தங்கச்சி பாப்பா வந்துடிச்சு பார்”….என்றபடி அறையிலிருந்த இருள் அகற்றினாள் திரைச்சீலையை இழுத்து விட்ட …..நான் முதலில் பெற்ற தாய்…

வெளிச்சக் கூசலில் கண்மூடிய கணவனின் யோசனை நொடியில் கட்டாயம் அகன்றிருக்கும் கவிந்திருந்த அந்த இருளின் துமி.
….ஷஹி….

Advertisements