ரஜினி நடித்து ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எந்திரன் படம் பல கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவது தெரிந்ததே!

ஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று பரவலாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்ட எந்திரன் படம் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என தகவல்கள் வருகின்றன. காரணம். பல கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட எந்திரன் படம் ரிலீஸ் ஆகும்போது போட்டி இல்லாமல் தியேட்டர்கள் கிடைத்து பல பிரிண்டுகள் ஒரே சமயத்தில் போட்டு, முதலீட்டை சீக்கிரமாக எடுக்க நினைக்கிறது சன் பிக்சர்ஸ். ஷங்கரும் கூட மற்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீசாகாத சமயத்தில் ரிலீஸ் செய்தால், எந்திரனின் கலெக்ஷன் இன்னும் கூடும் என்றே நினைக்கிறார். அமிதாக், அக்ஷய், அமீர், ஷாரூக் போன்ற பெரிய ஹீரோக்களிடம் பேசி ஹிந்தி ரிலீஸ் தேதி முடிவாகி விட்டது. தமிழிலும் கமல், விஜய், சூர்யா என எல்லா முண்ணனி ஹீரோக்களும் ரஜினிக்கென்று தனி மரியாதை வைத்திருப்பதால் ரிலீஸ் தேதியில் பிரச்சினை வராது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , திடீரென்று தற்போது எந்திரனுக்கு புதிதாய் ஒரு சவால் முளைத்துள்ளது.
முன்னொரு காலத்தில தமிழகத்தையே கலக்கிய அந்தத் திரைப்புயல் மீண்டும் மையம் கொண்டிருப்பதுதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது. ஆமாம் , டவுசர் திலகம் ராமராஜன் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் ஹீரோவாகவே நடிக்கிறார். அவர் நடிக்கும் படமான மேதை இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இருக்க, இதன் ரிலீஸ் தேதி தெரியாமல் எந்திரன் டீம் குழம்புகிறது. எங்கே எந்திரன் ரிலீசின் போதே மேதையும் ரிலீசானால் இவ்வளவு கோடி பட்ஜெட் எந்திரன் படம் மேதை முன் அடிவாங்குமோ! மேதை ரிலீசாகும்போது எந்திரனுக்கு தியேட்டர்கள் கிடைக்குமோ என யோசிக்கிறது சன் பிக்சர்ஸ். ஷங்கர் கவலைப்படுவது இன்டர்நேஷனல் மார்க்கெட் பற்றித்தான். ஏற்கனவே ராமராஜன் டவுசர் பார்த்து அமெரிக்காவில் ஷார்ட்ஸ் பிரபலமானது அனைவருக்கும் தெரியும் . ஒபாமாவே கரகாட்டக்காரன் பார்க்க தான் எப்படி அலைந்தேன் என்று ஓப்ராவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதனால் மேதை ரிலீசானால் அமெரிக்கா, ஐரோப்பாவில் எந்திரனுக்கு சரியான போட்டியாக இருக்கும். இதையெல்லாம் யோசித்து எந்திரன் படத்தை தள்ளிப் போடலாமா இல்லை ராமராஜனுக்கு சமரச தூது விடலாமா என எந்திரன் டீம் யோசித்து வருகிறது. உங்கள் கண் பார்வைக்கு மேதை படத்திலிருந்து சில காட்சிகள்….
(இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இந்தப் பகுதியை கட்டாயம் தவிர்க்கவும் )

பில்லாவுல தல இப்படித்தான உக்காருவாரு. நாங்களும் உக்காருவோம்ல!

இந்த டைரக்டர நம்பவே முடியல. இவன் நமக்கு குடுக்குற காஸ்ட்யூம்லாம் பாத்தா நாம ஹீரோவா வில்லனான்னே தெரியலயே!

என் படத்தை பார்த்து நீங்க ஏம்பா பயப்படுறீங்க, போங்கப்பா, போய் எந்திரனை ரிலீஸ் பண்ணிக்கோங்க!
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் ….சிங்கமொன்று புறப்பட்டதே…….
எனனது, நான் டவுசர்ல வர மாதிரி படம் ஃபுல்லா ஒரு சீன் கூட இல்லையா? தாய்குலம் மத்தியில் நம்ம இமேஜ் அடிவாங்குமோ!
Advertisements