பாராளுமன்றம் இன்று கூடுகிறது. : விலைவாசி பிரச்சினை கிளப்பப்படும் :

(பாராளுமன்றத்துக்கு வெளியே) கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா! ( பாராளுமன்றத்துக்குள் ) இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்கு?!

குஜராத் முன்னாக் மந்திரி அமித் ஷா போலி என்கவுண்டர் வழக்கில் சரண் :

மாப்பு, சரணடையலன்னா நம்மள என்கவுண்டர் போட்டுரப் போறாய்ங்க!

மகளுககு மந்திரி பதவி பெற முயற்சி செய்யவில்லை- ஷரத் பவார் அறிவிப்பு :

மன்மோஹன் விவரம் தெரிஞ்சவரு! இப்படி ஒரு அறிக்கை கொடுத்தா தானே புரிஞ்சுகிட்டு என் பொண்ணுக்கு மந்திரி பதவி கொடுத்துட மாட்டாரு? சும்மாவா இத்தனை கட்சி கூட்டணிய சமாளிக்கிறாரு!

நடிகர் கருணாசுக்கு கொலை மிரட்டல் :

போலீஸ் : ஏதாவது தடயம் இருக்கா சார்?
போலீசிடம் கருணாஸ் : சார், இந்த அளவுக்கு என் மேல கோபம் வரணுமின்னா என் படத்தைப் பார்த்தவனா தான் இருக்கும் . என் படம் பார்த்த ஆளுங்களை விரல் விட்டு எண்ணிடலாம். அந்த லிஸ்ட் எடுத்தீங்கன்னாலே கேஸ் முடிஞ்சா மாரிதான்!

இலங்கை செல்லும் நடிகர்களை யாரும் மிரட்டக் கூடாது : நடிகர் சங்கம் தீர்மானம் :

சரத்குமார் சார் : அப்படியே , நீங்களும் கன்னாபின்னான்னு படம் எடுத்து எங்களை மிரட்ட மாட்டீங்கன்னு ஒரு தீர்மானத்தை போட்டிங்கன்னா , ” நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லு!” நாங்களும் சொல்ல மாட்டோ

உண்மை செய்தி எல்லாம் இந்தக்கலரு !

 நம்ம கற்பனை இடைச்செருகல் இந்தக் கலரு !