“மஞ்சளின் மகிமை….”

சமையலில் வாசனைக்கும் சுவைகூட்டுவதற்கும் பயன்படும் மஞ்சள்,மிளகு,சோம்பு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம்,பூண்டு ஆகியவற்றுக்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சளுக்கென்று தனியான ஓர் இடமுண்டு.இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள் மங்கலகரமாகக் கருதப்படுகின்றது.100 கிராம் மஞ்சளில் அடங்கியுள்ள சத்துக்கள்…

இரும்புச் சத்து…67.8 மி.கி

சுண்ணாம்புச் சத்து..150மி.கி

பாஸ்பரஸ்…282மி.கி

மஞ்சள் அரிய குணங்களைக் கொண்டது.அது கிருமிநாசினியாகவும்,நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவல்லதாகவும்,
பாக்டீரியாவை அழிக்க வல்லதாகவும் விளங்குகிறது.குழந்தைப் பருவத்தில் வரும் லுக்கீமியாவைத் தடுக்கிறது. இயற்கையிலேயே விஷம் முறிக்கும் தன்மை உடையது,புராஸ்டேரேட் புற்றுநோயைத் தடுக்க வல்லது.

இத்தனைச் சிறப்புமிக்க மஞ்சளைத் தினமும் பயன்படுத்தி,பயன் பெறுவோம்.

பானுமதி.. ( டயட்டீஷியன்) Bsc N&D..

Advertisements