இரங்கற்பா எழுத…புலவர்காள்…வாருங்கள்!
இரயில் விபத்தெல்லாம் தொடரும் இனி …காணுங்கள்!
ரயில்வே அதிகாரிகள் …மீது ஊழல் குற்றச்சாட்டு…
மம்தாவுக்கு யார் வைப்பது நறுக்கென்று ஓர் குட்டு?
அள்ள அள்ளக் குறையாதா ஆற்று மணல்?
அள்ளட்டும், கக்கும் இனி ஆறுகள் அனல்!
உழுதுண்டு வாழ்வோரெல்லாம்..இனி வாழார்!
மேட்டூர் நீர் வரத்தில்லாமல்….
தொழுதுண்டு மெல்லச் சாவார்!
பல்கலைக் கழக சான்றிதழ்களிலும் போலி!
பிள்ளைகள் படிப்பெல்லாம் இனிமேல் கேலி!
மாநிலங்களின் ஒற்றுமை பார்க்கலாம் ஓர் விஷயத்தில்..
மாணவிகள் மீதான நிர்வாகிகள் பாலியல் முறைகேட்டில்!
இதில் எதற்கோ பட்டுக் குஞ்சலம் என்பதாம்போல்…
முகம்மது என்றசீலரின் பெயர் ஒருவர்க்கு…
அகம் அது எரியுது எமக்கு!

…..ஷஹி…..

Advertisements