பஞ்சு கோவாலு அவன் பெயர். எல்லாரும் அவனை பஞ்சு பஞ்சுன்னுதான் கூப்பிடுவாங்க. பஞ்சு அதிகம் படிக்கலியின்னாலும் வெவரமானவன். பொழக்கத் தெரிஞ்சவன். ஆனா அவன் கெட்ட நேரம், ஒருத்தருக்கும் கெட்டது நெனக்காத நம்ம பஞ்சு கோபாலையே உள்ள புடிச்சு போட்டிருச்சு போலீசு! ஆனாலும் பஞ்சு அசரல! ஏதோ நம்ம கெரகமின்னு அதையும் பாஸிடிவா எடுத்துக்கிட்டு, செயிலுக்குள்ள சந்தோஷமா இருந்தான். ஆனா நம்ம பஞ்சு கோவாலையே அசர வைக்கிற மாதிரி அவனுக்கு ஒரு கடுதாசி வந்த்து. அவங்க அப்பாரு அவனுக்கு எழுதுனது.
அன்பு மவனே!
நல்லா இருக்கியா? இங்கன நானும் குடும்பமும் நலம்! டேய் ராசா! நீ செயிலுக்குப் போனது கூட கவல இல்லடா. ஆனா நெலத்த உழுவுற சமயம் பாத்து உள்ளற போயிட்டயேடா! வருசா வருசம் இந்தக் கெழவனுக்கு அலுப்பு பாக்காம உழுது குடுப்பியே! இந்த வருசம் நான் என்ன செய்ய? அட, கூலிக்கு ஆள் வக்கலாமின்னு பாத்தாலும , அவனுங்க கேக்குற சம்பளம் ஆத்தாடி! என்னால முடியாத செயிலுக்கு போனதால பயிர் நடாம உட்டாலும் நெலம் கெட்டுப் போயிரும்! அதனால நானே உழப் போறேண்டா எம்மவனே! ஒடம்ப பாத்துக்க!”
அப்படின்னு அந்தக் கடுதாசியில இருந்த்து. அதப் பாத்த்தில இருந்து நம்ம பஞ்சுக்கு கையும் ஓடல்ல! காலும் ஓடல்ல. எதுக்கும் டென்சன் ஆவாத நம்ம பஞ்சுவே விடிய விடிய தூக்கம் கெட்டான். விடியக் காலையில் காதும் காதும் வச்சா மாதிரி ஒரு கடுதாசிய எழுதிப் போட்டான்.
அய்யா தகப்பனாரே!
நீர் உழ நெனச்சது என்னமோ நியாயந்தேன்! ஆனா நம்ம வயலோட வாய்க்கா வந்து முட்டுதே அங்க மட்டும் உழுதுப்புடாதீரும். அங்கத்தான் நான் அந்தச் சீமத்துப்பாக்கியும் கொள்ளயடிச்ச பொருளையும் பொதச்சிருக்கேன்! அதனால நீரு உழாம இருந்தாலும் பரவாயில்ல! ஏற்கனவே செயில்லுக்குள்ளற இருக்கற எனக்கு பிரச்சினை பண்ணாம இரும்!” அப்படின்னு எழுதினான். பதில் கடுதாசி ஒரு நாலு நாளு கழிச்சி வந்த்து.
டேய் மவனே பஞ்சு!
நீ என்னமோ ஓளிச்சு வச்சிருக்கேன்னு சொல்லி போலீசு ரெண்டு ஜீப்புல வந்து நம்ம வயல தோண்டு தோண்டுன்னு தோண்டிப்புட்டாய்ங்க. என்னமோ துப்பாக்கி வச்சிருக்கயாம , அது கடைசி வரைக்கும் அவுஹ கண்ணுக்கு தட்டுப் படலே! ஏதும் ஆபத்துல சிக்கியிருக்கியாடா மவனே?”
அப்பாரு கடுதாசி பார்த்து பஞ்சு எழுதினான்:
அப்பாரு!
என்கிட்ட துப்பாக்கியுமில்ல தோட்டவுமில்ல. சும்மாத்தான் அப்புடி எளுதிப் போட்டேன்! உம்ம நெலத்தத்தான் போலீஸ் காரவுஹ ஓசியில உளுதுட்டாகல்ல! இனி நிம்மதியா நடவு நடுங்க!”
அதாவது செயிலுக்குள்ள இருந்துக் கூ , அப்பாருக்கு ஒதவி பண்ணியிருக்கான் நம்ம பஞ்சுப் பயபுள்ள!
கதையிலிருந்து நம்ம பஞ்ச : ஒருத்தருக்கு உதவி பண்ணனுமின்னா எங்கஇருக்கோம்கறது முக்கியமில்ல! மனசிருந்தா போதும்!
Advertisements