செய்தி : பாராளுபன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் !
இடைச்செருகல் : அந்தக் கூட்டமாவது சுமுகமா நடத்துவீகளா? 


செய்தி : மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு
இடைச்செருகல் :  தமிழகத்துல மின்சார சப்ளையும் ரொம்ப குறைவு தானுங்களே!
செய்தி : கிளிண்டன் மகள் செல்சியாவுக்கு 19 கோடி செலவில் ஆடம்பர திருமணம்!
இடைச்செருகல் : தோட்டத்தில் கேட்டது : பாருடி, 19 கோடியில சொந்த மகளுக்கு சிம்பிளா கல்யாணம் பண்றாங்க! நம்மல்லாம் வளர்ப்புக்கே டபுளா பண்ணுவோம்!

செய்தி : பெங்களூரில் ரூபாய் 45 லட்சம் விலையுள்ள திருட்டு ஆபாச வி.சி.டி பறிமுதல் -தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டது !

இடைச்செருகல் : எக்ஸ்போர்ட் வேற பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? சூப்பர் அப்பு!