எஸ்.பி.பி பாடினநிறம் மாறாத பூக்கள்படத்தில்முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே!” பாட்டை கேட்டிருப்போம். ராதிகாவும் சுதாகரும் தோன்றும் அந்தப் பாட்டு 70 களின் சிறந்த டூயட்டுகளில் கட்டாயம் இடம்பெறும். அந்தப் பாட்டுக்கு பின்னால் ஒரு சுவையான கதை. எஸ்.பி.பியும் பாரதிராஜாவும் சினிமாவுக்கு வந்து பிரபலமாவதற்கு முன்னால் ஒரு ஃப்ளாஷ்பேக். இரண்டு பேரும் ஒரே அறையில் தங்கி சினிமாவுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரே சட்டையை மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளும் அளவுக்கு இரண்டு பேரும் நெருக்கம்எஸ்.பி.பி ஒரு பாடகர் அந்தஸ்தை பெற்று பிரபலமான சில வருடங்களுக்குப் பிறகே பாரதிராஜாவுக்குபதினாறு வயதினிலேஇயக்கும் வாய்ப்பு கிடைத்த்து. பட்த்தின் முதல் பாட்டு ரெக்கார்டிங். பாட்டுஆட்டுக்குட்டி முட்டையிட்டு”. இளையராஜா அருமையாக இசையமைத்து ஒரு பாடகரை வைத்து ட்ராக் பாடி பாடல் எஸ்.பி.பி வருகைக்காக வெயிட்டிங். எஸ்.பி.பி வந்தார்.
ட்ராக்கில் பாடலைக் கேட்டார். கேட்டபின்இந்தக் குரலே நல்லாத்தான் இருக்கு! இதை இப்படியே வச்சிடுங்க! இதைவிட நான் இந்தப் பாட்டை சிறப்பா பாட முடியாது!” என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. பாடலை ட்ராக் பாடிய பாடகர் வாசு என்ற மலேசியா வாசுதேவன். மலேசியா வாசுதேவன் அந்தப் பாடல் மூலம் அறிமுகமாகி தமிழ் இசையுலகில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் நல்லது நடந்தாலும் வேறொரு வகையில் இது பிரச்சினையைக் கிளப்பியது. இயல்பிலேயே கொஞ்சம் ரோஷக்காரரான பாரதிராஜா இதை தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாகவே எடுத்துக் கொண்டார். அதனால் அவர் எஸ்.பி.பி யை இனி தன் எந்தப் படத்திலும் பாட வைப்பதில்லை என்று ஒரு முடிவெடுத்தார். அதை செயலும் படுத்தினார். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என்று தன் ஆரம்ப படங்களில் எஸ்.பி.பியை பயன்படுத்தவேயில்லை. அப்புறம் இரு நண்பர்களும் மனம் விட்டுப் பேசிய பிறகு எஸ்.பி.பி சக கலைஞனை மதிக்கும் விதத்திலேயே அந்தப் பாட்டை பாடவில்லை என்ற உண்மை பாரதிராஜாவுக்கு புரிந்த்து! இரு நண்பர்களும் நிறம் மாறாத பூக்களில் முதல் முறையாக ஒன்று சேர்ந்தார்கள். பாடல் ஆசிரியரும் குறும்பாய்முதல் முதலாக காதல்  டூயட் பாட வந்தேனே!” என்று சிட்டுவேஷன் புரிந்து எழுத அதை எஸ்.பி.பி பாடினார்…..பின்னர்பொன்மாலைப் பொழுதுமுதல்மானூத்து மந்தையில்வரை எத்தனையோ பாரதிராஜா படங்களை எஸ்.பி.பியின் குரல் அலங்கரித்த்து!
Advertisements