சொன்னாலும் சொல்லுவாங்க!

“பேசாதே” படத்துவக்க விழாவில்


பாக்யராஜ் : ஏங்க முத முதல்ல க்ளாப் அடிச்சேன். அப்புறம் கதாசிரியரானேன். சைடு ரோல் பண்ணேண். கதாநாயகனானேன். அப்புறம் டைரக்டரானேன்.

அப்புறம் திரும்ப சைடு ரோல் பண்ணேன். கதை எழுதுனேன்..கடைசியில திரும்ப க்ளாப் அடிக்க வுட்டிடீங்களே!

தமிழ் சி.டி வெளியீட்டு விழாவில்


கனிமொழி : கட்சின்னாலும் சரி, படமானாலும் சரி, சிடின்னாலும் சரி… எங்க குடும்பம் தான் ரிலீஸ் பண்ணுவோம்…

கோரிப்பாளையம் ஆடியோ வெளியீட்டு விழா


விஜய்காந்த் : தமிழ்நாட்டுல மொத்த சி.டி. கடை 4,65,546. அதுல ஒரு நாளைக்கு விக்குற சி.டி 36,83,119. அதுல 26,17,456 ஒரிஜனல் சி.டி. மீதி 24,16,322 கள்ள சி.டி.
பக்கத்திலிருப்பவர் : அண்ணே … டோட்டல் இடிக்குதுண்ணேன்!
விஜய்காந்த் : டேய், எவண்டா இந்த ஸ்க்ரிப்டை எளுதிக் கொடுத்தது?

“கனிமொழி” படத்தொடக்க விழாவில்

சோனா மேடம் ! நீங்க கவர்ச்சி நடிகைதான். அதுக்காக பூஜை பண்ண தேவநாத அர்ச்சகரெல்லாம் கூட்டிட்டு வர முடியாது. இவங்க தான் கிடைச்சாங்க!

ஆதவன் நூறாவது நாள் விழாவில்

கமல் : ஏம்பா, நிஜமாவே இந்தப் படம் நூறு நாள் ஓடுனுச்சா?
ரவிகுமார் : சும்மா போடறதுதாங்க! எவனுக்கு தெரியப் போவுது!
சூர்யா : கமல் சார் ! எல்லாமே உங்ககிட்ட கத்துகிட்டதுதான் சார்!

படிச்சிட்டு சிரிச்சீங்கன்னா அப்படியே ஒரு ஓட்டையும் போட்டுப்போங்க அப்பு! புண்ணியமாப் போகும்!