சாப்பிடும் பொழுது மிளகை தவிர்ப்பவரா நீங்கள்? அப்படியானால் இதை கண்டிப்பாக படியுங்கள். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மிளகை, வியாபாரிகள் கருப்பு தங்கம் என்றும் அழைப்பர்.சிறந்த மருத்துவ குணம் கொண்ட மிளகை பண்டையகாலத்தில் இருந்து அதன் வாசனைக்காகவும் சுவைக்காகவும் உலகம் முழுவதிலும் பயன்ப்படுத்தி வருகிறார்கள்.
நுரையீரல் நோய், இருதய நோய்,பூச்சிக்கடி, அஜீரண கோளாறு, பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் மிளகை பொடித்து தேனுடனோ அல்லது கசாயமாகவோ வைத்து குடிப்பது ஜலதோஷம்,இருமல்,தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது.

100கிராம் மிளகில் உள்ள சத்துக்கள்
மக்னீசியம்……..171மிகி
மாங்கனீஸ்……4.12மிகி
காப்பர் ……..1.42மிகி
புரதம் ……..11.5கி
கொழுப்பு ………6.8கி
சுண்ணாம்பு ……….460மிகி

என்ன! இனிமேல் மிளகை சேர்த்துக்கொள்வீர்கள் தானே?

DIET-B

Advertisements