உலக சுகாதார நிறுவனத்தின்[WHO]அறிக்கையின்படி இந்தியர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்துக்கள் அதிகம்.2012ல் உலக இதய நோயாளிகளில் 60% பேர் இந்தியர்களாக இருப்பர், எனவும் அது கூறுகிறது.
ஒரு நாளைக்கு 100000 தடவை துடிக்கும் நம் இதயத்தை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.நம்முடைய பழக்க வழக்கங்கள் ,உணவு முறைகளில் சிறு சிறு மாற்றங்களை ஏற்ப்படுத்துவதின் மூலம் நம்மையும் நம் குடும்பத்தையும் இதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அபாயகரமான காரணிகள்[RISK FACTORS]
இதய நோய்க்கான முக்கியமான,அபாயகரமாண காரணிகளை இப்பொழுது பார்க்கலாம்.உடற்பயர்சி இன்மை,உடல் பருமன்,மன அழுத்தம்,நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டிரால்,வயது[மூப்பு],பாலினம்[sex],இதய நோய்க்கான குடும்ப வரலாறு[family history].
நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய அபாயகரமான காரணிகள்:
புகைபிடித்தல்:புகைப்பவர்களுக்கு 2-6மடங்கு இதயநோய் வருவதற்க்கான  வாய்ப்பு அதிகம் இருபதாகக் கருதப்படுகிறது.புகையிலையில் உள்ள நிக்கோட்டின் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. ஆதலால் புகை நமக்கு பகை என்று கூறி நம் இதயத்தை பாதுகாத்துக்கொள்வோம்.
உடற்பயிர்ச்சியின்மை:நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை[good choiesterol-HDL]குறைத்து நம் உடல் எடையை கூட்டிவிடுகிறது. நடைப்பயிர்ச்சி,நீச்சல்,சைக்கில் ஓட்டுதல்,யோகாசனஙகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை1/2–3/4 ம்ணி நேரம் மேற்கொண்டால் நம்  இதயத்தை பாதுகாத்துக்கொள்ளாம்
உடல் பருமன்:மேல் நாட்டு உணவுகலாச்சரம்,துரித உணவுவ கைகள் போன்றவற்றை தவிர்த்து,நம் அன்றாட உணவில் சிறு மாற்றங்கள் செய்தால் நம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.ஏனெனில் உடற் பயிற்சி இல்லாததால் ஏற்படும் இதய நோயால் இறப்பவர் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது என்று ஒரு கணிப்பு கூறுகிறது.

தொகுப்பு……DIET-B
தொடரும்….[இது ஒரு மறு பதிப்பு]

Advertisements