“Blessed is the family that dines together.Blessed is the family that prays together”…னு சொல்லுவாங்க.நோன்பு துறத்தல் இது ரெண்டையுமே ஒரே நேரத்தில செய்வது இல்லையா?அதாவது உண்பதும் அதே நேரம் வழிபாடும் செய்வது…அப்படிப்பட்ட மகிமை பொருந்திய நோன்பு துறக்கும் போது சத்தான,எளிமையான உணவு வகைகள் உண்பது மிகவும் அவசியம் இல்லையா?அப்படிப் பட்ட உணவு திட்டம் ஒண்ணு இப்ப பாக்கலாம்,வாங்க சமைக்கலாம்…

ஈசி நோன்பு கஞ்சி!
(சுமார் நாலு நபர்களுக்கு)

தேவையான பொருட்கள்___
1.பச்சரிசி நொய்__1/2 கப்
2.பெரிய வெங்காயம்(பொடியாய் நறுக்கியது)__1
3.தக்காளி(பொடியாய் நறுக்கியது)__1(அ)2
4.வெந்தயம்,கடலை பருப்பு__தலா 2 ஸ்பூன்
5.பயத்தம் பருப்பு_2 ஸ்பூன்
6.புதினா மல்லி(பொடியாய் நறுக்கினது)__2 மேசைகரண்டி
7.இஞ்சிபூண்டுஅரவை__2ஸ்பூன்
8.பட்டை,கிராம்பு,ஏலம்__தலா1
செய்முறை__

குக்கரில்அரிசிநொய்,க.பருப்பு,பா.பருப்பு,புதினா,மல்லி,வெந்தையம்,வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு அரவை அதோடு சில துளிகள் எண்ணை விட்டு சுமார் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வெய்ட் போடவும்.விசில் வந்ததும் தீயைக் குறைத்து பத்து நிமிடம் கணக்கு.திறந்ததும் கரண்டியால் மசிது உப்பு போட்டு பட்டை,கிராம்பு ஏலம் சிறிது நெய்யிலோ,எண்ணையிலோ தாளித்துக் கொட்டவும்.ஈசி நொன்பு கஞ்சி ரெடி!

அடுத்த ஐட்டம்

முட்டை பணியாரம்


தேவையான பொருட்கள்_
1.இட்லி மாவு__சுமார் 2 கப்,
2.முட்டை__2(அ)3
3.பொடியாக நறுக்கிய வெங்காயம்1.,2.ப.மிளகாய்,மல்லி_1/2கப்
4.உப்பு தேவையான அளவு
5.,துளி சோடா
செய்முறை_

முட்டையை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.வெங்காயம்,ப.மிளகாய்,மல்லி ஆகியவற்றை சேர்த்து அடித்துக்கொண்டு,உப்பு சேர்த்து,மாவு கலந்து கொள்ளுங்கள்.சோடா உப்பு சேர்க்கலாம்.நான்ஸ்டிக் குழிப்பணியார கல்லில் சிறிது எண்ணெய் விட்டு,கலந்த மாவை பணியாரங்களாக சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
இதற்கு சின்ன வெங்காயம்,புளி,உப்பு,வர மிளகாய் சேர்த்து அரைத்து தாளித்த சட்னி நல்ல காம்பினேஷன்.

இனிப்பு?

கடல் பாசி(சைனா கிராஸ்)புட்டிங்


(இது நோன்பு வைத்த வயிற்றுக்கு மிகவும் இதமானது,மினரல்கள் நிரம்பினது.)
தேவையான பொருட்கள்__
1.சைனா கிராஸ்_ஒரு முழு கைப் பிடியளவு,
2.பால்__1லி,
3.சீனி__1(அ)1/2 கப்,
4.ஏலப் பொடி சிறிது,துளி உப்பு.
செய்முறை__

பாலை அடுப்பில் இட்டு காய்ச்சவும்,பொங்கி வரும் சமயம் சைனா கிராஸை சேர்த்து,அது கரைந்ததும்சீனி, உப்பு பொடவும்,ஏலத்தூள் போட்டு இறக்கவும்.ஒரு அகலத்தட்டில் கொட்டி ஆற விடவும்.ஆறியதும் அழகாக அல்வா போல கட் செய்ய வரும்.குளிர் பெட்டியில் வைத்தால் சீக்கிரம் இறுகும்.இதிலும் பல வேரியேஷன்ஸ் செய்யலாம்.

அடுத்தாக

பானம்
இன்று எளிமையாக சாத்துக்குடி சாறு பிழிந்து பரிமாறலாம்.அதிலும் சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

நோன்பு நேரத்தில் அதிகமாக வணக்க வழி பாடுகளில் ஈடு படாமல் வித விதமாய் சமைப்பதா?நோன்பாளியின் தூக்கமும் தொழுகையாச்சே?சிறிதே ப்ரீ பிளான் செய்து கொண்டால் எல்லாம் வெகு சுலபம் தான்.எங்கள் வீடுகளில் நோன்பு துவங்கும் முன்பே மல்லி புதினா வாங்கி சுத்தம் செய்து கழுவி,நறுக்கி,துளைகள் உள்ள டப்பாக்களில் இட்டு குளிர் பெட்டியில் வைத்து விடுவோம்,அதே போல் இஞ்சி பூண்டு அரவை,பட்டை,கிராம்பு,ஏலம் பொடி தயாராக இருக்கும்,அரிசியை மிக்சியிலிட்டு நொய் செய்து கொள்வோம்,இப்படி பல முன்னேர்ப்பாடுகள் செய்து நோன்பை வரவேற்போம்!நீங்க?

நாளை மற்றுமோர் மீல் பிளான்….

Advertisements