இன்றைக்கு நோன்பு திறக்க மெய்ன் ஐட்டம் சக்கரைப் பொங்கல்..இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஐட்டம் தான்.தெரியாதவங்களுக்காக அளவும்,செய்முறையும்.
சர்க்கரைப் பொங்கல் சுமார் நான்கு நபர்களுக்கு.நயமான பச்சரிசி-1 ஆழாக்கு,
பயத்தம் பருப்பு-1/2 ஆழாக்கு
,நல்ல மண்டை வெல்லம்-11/2 கப்,
நெய்-1/4 கப்,
முந்திரி,திராட்சை தலா 2 மேசைக்கரண்டி,
ஏலத்தூள்-1/2 ஸ்பூன்,
பால்-1/2 லிட்டர்.
செய்முறை-பயத்தம்பருப்பை அலசி நீர் வடிய விட்டு,வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு லேசாக வதக்கவும்.அரிசியைக் கழுவி பாலும் தண்ணீருமாக 5 ஆழாக்கு அளவில் எடுத்து பருப்பையும் சேர்த்து குக்கரில் ஒரு பாத்திரத்தில் வைத்து 10-12 நிமிடம் வேக வைக்கவும்.ஒரு வாணலியில் வெல்லத்தைத் தட்டிப் போட்டு,கொஞ்சம் போல தண்ணீர் விட்டு,கரையும் வரை கலந்து வடிகட்டி,வடிகட்டவும். பிறகு சிறிது நேரம் வாசம் வரும் வரை கொதிக்கவிடவும்.பிறகு அதில் வெந்த பொங்கலைச்சேர்த்து,கலக்கவும்.வாணலியில் நெய் விட்டு முந்திரி,திராட்ச்சை வறுத்து,ஏலப் பொடியையும்(ஆமாங்க லேசா வறுத்தா வாசம் கூடும்) சேர்த்து வதக்கி பொங்கலில் சேர்த்து,கிண்டவும்.சர்க்கரைப் பொங்கல் ரெடி!
இதுக்கு நல்ல மேட்ச் உளுந்து வடை!
தேவையான பொருட்கள்-
உளுந்து ஒரு ஆழாக்கு, பச்சரிசி-2 ஸ்பூன்,
பெரிய வெங்காயம்-4,
ப.மிளகாய்-4
கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்துமல்லி,
உப்பு,
பொரிக்க எண்ணெய்.
செய்முறை-
உளுந்த ஊற வைக்காமல், (ஆமாங்க! ஊறவைக்காம அரைச்சா எண்ணை குடிக்காம, நல்லா கிரிஸ்ப்பா வரும்) அரிசி சேத்து கிரைண்டரில் தண்ணீர் தெளித்து தெளித்து, கெட்டியாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மாவுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், மிலகாய், மல்லி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து, எண்ணை நன்கு காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.
அடுத்தது ,சர்பத். இது எங்க மாமியார் ஸ்பெஷல்!
சுமார்4 பேருக்கு தேவையானவை-
சப்ஜா விதை 2 ஸ்பூன்,
ஸ்கூல் விதை-2 ஸ்பூன்,
பாதாம் பிசின் பொடி-2ஸ்பூன்,
2 ஸ்பூன் வெந்தயம்,
2 எலுமிச்சை பழம்,
சீனி தேவையான அளவு,
துளி உப்பு.

(விதைகளும், பாதாம் பிசினும் மருந்து கடைகளில் கிடைக்கும். மிகுந்த நார்ச்சத்தும், குளுமையும் கொண்ட ரெசிப்பி இது.)
விதைகள், பாதம் பிசின் பொடி, வெந்தயம் எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற விட்டு, பழத்தைப் பிழிந்து சேர்த்து, சீனி, உப்பு சேர்த்து கலக்கி, ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும். நோன்பு வைத்த மயக்கம் தீரவும், சூடு தணியவும் நல்ல பானம் இது!

Advertisements