இளையராஜா vs .ஆர்.ரஹ்மான்

இசைஞானி இளையராஜாவும் இசைப்புயல் .ஆர்.ரஹ்மானும் இசையில் என்னென்ன சிகரங்களையோ தொட்டு விட்டவர்கள். அவர்களின் இசைத்திறனை கணிக்கும் திறன் எனக்கு இல்லை. ஆனால் ஒரு ரசிகனின் பார்வையில் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு ரசிகனின் அமெச்சூர் முயற்சிதான் இந்தப் பகுதி. இது ஏதோ இசை ஆராய்ச்சி எல்லாம் இல்லை. சில பாடல்களை எடுத்துக் கொண்டு இந்த இரு மேதைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். கூடுமானவரை ஒரே மாதிரியான சிட்டுவேஷன்களில், கதையம்சத்தில் இருவரும் எப்படிப்பட்ட பாடல்களைத் தந்திருக்கிறார்கள் என்று பார்த்து ஒவ்வொரு பகுதியிலும் யார் அந்தந்த பாடல்களைப் பொறுத்த வரை சிறந்த இசையமைப்பாளர் என்று பார்ப்போம். இதுல நாம முதலில் எடுத்துக்கொள்ளும் பாடல்கள் :
.ஆர்.ரஹ்மானின்பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூவும் இளையராஜாவின்என்னவென்று சொல்வதம்மாவும்.

பெண்ணல்ல ஊதாப்பூ இடம்பெற்ற திரைப்படம்உழவன்”. பிரபு தன் காதலி ரம்பாவை நினைத்து தன் தோழி பானுப்ரியாவிடம் தன் காதலியின் அழகைப் புகழ்ந்து பாடுவார்.

என்னவென்று சொல்வதம்மாஇடம்பெற்றதுராஜகுமாரன்”- பிரபுவின் நூறாவது படம் . இதில் தன் காதலி நதியாவின் அழகைப் புகழ்ந்து தன் அத்தைப்பெண் மீனாவிடம் பாடுவார்.  

இரண்டு பாடல்களையும் பாடியது நம்ம பாடும் நிலா எஸ்.பி.பி. இதைவிட இரு இசை மேதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஒரே மாதிரியான சிட்டுவேஷன் வேறு என்னங்க வேணும்?

.ஆர். ரஹ்மான் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூவில் நம்மை ஒரு தென்றல் வருடுவதைப் போல வருடிவிட்டுப் போகிறார். அந்த ட்யூனின் நெளிவும் சுளிவும் அற்புதம். இளையராஜாவின் என்னவென்று சொல்வதம்மாவில் தன்னையும் அறியாமல் ஒரு தாலாட்டு எஃபக்ட் வந்து விடுகிறது அதுவும் பி
பு
மீனாவை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதாலோ என்னவோஅவள் வான்மேகம் காணாத பால்நிலா!” என்ற வரிகளில் நம்மை அறியாமல் சொக்குகிறோம். பல்லவி என்று எடுத்துக்கொண்டால் இரு பாடல்களுமே மனதில் சரி சமமாய இடம்பிடிக்கிறது.
இப்ப ரெண்டு சரணங்களையும் இடையில் உள்ள இசையையும் எடுத்து பார்ப்போம். தெம்மாங்கு பாடிடும்என்று இளையராஜா அவருக்கே உரிய தாளந்தவறா பேட்டர்னில் பாட்டைக் கொண்டு செல்கிறார். .ஆர்.ஆரோ எஸ்.பி.பியை பேஸ் வாய்சில்தென்றலைப் போலஎன்று குழைய வைக்கிறார். இரண்டு பல்லவிகளையும் அசைபோட்டால் இரண்டுமே இனிமை என்றாலும் காதலியின் அழகை வர்ணிக்கும் பாடல் என்பதால் மென்மையையும் இனிமையையும் கொஞ்சம் அதிகமாய்பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூவில்கலந்து இந்த இரு பாடல்களைப் பொறுத்த வரை அதிக மதிப்பெண்களை பெறுபவர் .ஆர்.ரஹ்மான் தான்!
Advertisements