ஒரு தண்டவாளத்துக்கும் இன்னொரு தண்டவாளத்துக்கும் உள்ள இடைவெளி 4 அடி 8.5 அங்குலம்.நாலு அடி சரி, அது இன்னா நாலு அடி 8.5 அங்குலம்? யோசிச்சா மண்டையே வெடிச்சுடும் போல்க்கீது… அதனால் அதுல ஒரு சின்ன சைன்ஸ் ரிசர்சு … ஹி ஹி

ஏன் அமெரிக்காவுல இப்படி ரெயில் ட்ராக்க வச்சாங்க? ஏன்னா லண்டன்ல அது போல இருந்துச்சு. அத்தையே பாத்து அமெரிக்கா காப்பியடிச்சாங்க… நாமளும் காப்பியடிச்ச்சோம்…

சரி, இங்கிலாந்துல ஏன் அது போல அளவு வச்சாங்க? ஏன்னா, அதே அளவுல அதுக்கும் முன்னாடி ட்ராம்வே இருந்துது! அதனால அது போல செஞ்சாங்க! அது ரைட்டு ! ஆனா ஏன் ட்ராம்வேக்கு இந்த அளவு? ஏன்னாக்கா ட்ராம்வே செஞ்சவுங்க ஏற்கனவே கீழ உள்ள் படத்துல உள்ளதப் போல வேகன் சக்கரம் செஞ்சவுங்க.

அதே டூல்சை வச்சு ட்ராம் வே பண்ணதால வேகன் வண்டில ஒரு சக்கரத்துக்கும் இன்னொரு சக்கரத்துக்கும் எவ்வளவு கேப் இருந்துதோ அத்தையே மெயின்டெயின் பண்ணிக்கினாங்க! சரி வேகன் வண்டிக்கு ஏன் அந்த அளவு? ஏன்னாக்க்கா அந்த அளவு இல்லன்னாக்கா சக்கரம் கெட்டுப்பூடும். ஏன்னாக்கா அப்போ ரோடுங்கல்லாம் கீழ உள்ள படத்தப் போல இருந்துது.

சரி, இந்த ரோடுல அந்த ரெண்டு சக்கரத்தடம் எப்டி ஆனுச்சு? அது ரோமன் காலத்துலேர்ந்து ஓட்டிக்கினு வர்ற சேரியட் வண்டிங்களால வந்தது. அதுக்கப்புறம் வந்த எல்லாரும் அவங்க வீலைக் காப்பாத்திக்க அதையே மேட்ச் பண்ணிக்கினாங்க!


சரி, அப்ப அந்த ரோமன் சேரியட்ல ஏன் அந்த அளவு வச்சாங்க ? ( நாங்க உட மாட்டோம்ல , டவுட் தனபால் மாறி கேட்டுக்கினே இருப்போம்ல) …
அது ஒண்ணீயும் இல்லங்க, சப்ப மேட்டரு… ஏன் அந்த அளவு வச்சாங்கன்னா … அது கரிக்டா ரெண்டு குதிரையோட பின்பக்கத்தை மேட்ச் பண்ணி வச்சிட்டாங்க !

இப்ப புரிதா குதிரையோட பினபக்கம் எந்த அளவுக்கு சைன்ஸையே கன்ட்ரோல் பண்ணுதுன்னு…….
ஹலோ தலைவா… இவ்வளவு முக்கியமான விளக்கம் குட்த்துக்கிறேன்… ஒரு ஓட்டப் போட்டு போ தலைவா, புண்ணியமா போகும்……
Advertisements