மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவிகிதமாக இருக்கும் வேளாண்மைத்துறையின் பங்கு 4% ஆக வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை இடப்படுகிறது.
1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த 30 கோடி மக்களுக்கே உணவு உற்பத்தி போதாத நிலை இருந்தது.1960 களின் மத்தியில் பஞ்சம் ஏற்பட்டபோது பட்டினிச்சாவை தவிர்க்க அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.இந்நிலையில் மெக்ஸி்கோ நாட்டில் உணவு உற்பத்தியில் அதிசயம் நிகழ்த்திககாட்டிய நோபல்பரிசு பெற்ற அமெரிக்க வேளாண்விஞ்ஞஆனி நார்மன் போர்லாக் கின் சாதனைகளை அறிந்துகொண்ட அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம் இந்திய உணவு பிரச்சினைக்கு இதுவே சரியான தீர்வு என முடிவு செய்தார்.சுமார் 16000 மெ.டன் உயர் விளைச்சல் தரும் கோதுமை ரக விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன.புதிய ரக விதைகள் மற்றும் ரசாயன உரங்களின் உதவியோடு பசுமைப்புரட்சி நிகழ்த்தப்பட்டது.உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது.
1950 களில் 50.82 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி2008-09 ம் ஆண்டில் 230.67மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
இது எப்படி சாத்தியமானது?
வளர்ச்சி தொடரும்…
agri S
Advertisements