வெங்காய குடும்பத்தை சேர்ந்த பூண்டு[Allium sativum]கி.பி 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகவும்  மருந்தாகவும் ப்யன்பட்டு வந்திருக்கிறது.பூண்டில்
ஈரப்பதம் ….           62.0%
புரதம்       …            6.3%
கொழுப்பு….            0.1%
தாது உப்புக்கள்….1.0%
நார்சத்து             ……0.6%
மாவுச்சத்து       29.8%[CHO]  அடங்கியுள்ளது.
பூண்டின் மருத்துவ குணங்கள்;   பசியை தூண்டக்கூடிய சக்தி கொண்டதாகவும்  ,மூலம்,குஸ்டம்,ஆஸ்துமா,இருமல் ம்ற்றும் இருதய நோய்க்கு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது.
பூண்டின் பிரத்தியேக மணத்திற்க்கு காரணமான SULPHUR ,பூண்டு எண்ணெய்யிலும் அதிக அளவில் உள்ளது.பூண்டு எண்ணெயானது பலவித நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது[HIGH THERAPEUTIC VALUE].பாலில் கொதிக்க வைத்த பூண்டு  எலும்புறுக்கி நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
சமீபத்திய ஆய்வின்படி பூண்டு ரத்தக்கொதிப்பை குறைக்கும் என்றும் ,தொடர்ந்து உபயோகிக்கும் பட்சத்தில் மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் ரத்தக்குழாயில்  கொழுப்பை படியவிடாது தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.மாரடைப்பு வந்த நோயாளி,தொடர்ந்து பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் அவரின் கொலஸ்ட்ரால்
கண்டிப்பாகக் குறையும்.[Can minimize the chances of new attacks].
மேலும் பூண்டு கிருமிநாசினியாகவும் ,புண்களை ஆற்றக்கூடிய சக்தி கொண்டதாகவும், நம்மை என்றும் இளமையுடனும்  வைத்திருக்கிறது.
-diet  B

Advertisements