இன்றைக்கு முதலில், பழ சாலட்
தேவையான பொருட்கள்;
ஆப்பிள்-1,
வாழைப்பழம்-1,
சப்போட்டா-1,
அன்னாசி-2 வட்டம்
,மாம்பழம் கிடைத்தால்-2 பெரிய துண்டு,
முந்திரி-2 மேசைக்கரண்டி,திராட்சை-2மே.கரண்டி,
சுண்டக்காய்ச்சின பால்-1/2 கப்,
மில்க்மெய்ட்-2மே.கரண்டி.
செய்முறை-
எல்லாப் பழங்களையும் சிறு துண்டங்களாக நறுக்கி,பால்,மில்க்மெய்ட் சேர்க்கவும்.தேவைப்பட்டால் சிறிது சீனி சேர்த்துக் கொள்ளலாம். முந்திரியை ஒடித்து,திராட்ச்சையையும் சேர்த்து கொஞ்சம் நெய்யில் வறுத்து அலங்காரமாகத் தூவவும். ஃப்ருட் சாலட் தயார்.

கட்லெட்
தேவையான பொருட்கள்-
உருளைகிழங்கு-அரை கிலோ,
கேரட்,பீட்ரூட்,பெரிய வெங்காயம்,தலா 2,
பச்சை பட்டாணி-1/2 கப்,
முட்டை-2,
ரஸ்க் தூள்-1/2 கப்,
கரம்மசாலா பொடி-1/2 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு அரவை-1 மே.கரண்டி,
உப்பு தேவையான அளவு,
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்,
எண்ணெய்-பொரிக்க.
செய்முறை-
கேரட்,பீட்ரூட்,உருளை எல்லாவற்றையும் தோல் சீவி,துண்டங்களாக்கி ,பட்டாணியையும் சேர்த்து நீர் விடாமல் குக்கரில் வேக வைக்கவும். இறக்கி மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு, கரம் மசாலாத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து,வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளை சேர்த்து, இஞ்சி பூண்டு அரவை போடவும், உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து மல்லித்தழை எலுமிச்சம் சாறு சேர்க்கவும். முட்டைகளை அடித்துக் கொள்ளவும். காய்கறி கலவையை கொஞ்சம் பெரிய எலுமிச்சை அளவு உருட்டி, தட்டையாக்கி,முட்டையில் முக்கி ரஸ்க் தூளில் பிரட்டவும். தோசைக்கல்லில் எண்ணை விட்டு கட்லட்டுகளைப் பொரித்தெடுக்கவும். தக்காளி ஸாஸோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
இதோடு நோன்புக்கஞ்சி(பார்க்க ஈசி நோன்பு கஞ்சி. நோன்பா?சமைக்கலாம் வாங்க)
மற்றும் ஒரு பழச்சாறு. இன்றைக்கு அன்னாசிச்சாறு பிழியலாம். பழத்தை முட்கள் நீக்கி வெட்டி, ஐஸ் க்யூப்ஸ், சீனி அல்லது தேன் நீர் சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டி பரிமாறவும்.

Advertisements