செட்டிநாடு என்றால் நம் நினைவுக்கு வருவது செட்டிநாட்டு உணவு மற்றும் பலகார வகைகள்.தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமல்ல ,உலகம் முழுக்க இதற்கு தனி செல்வாக்குண்டு.
சொக்க வைக்கும் சுவையுடனும்,மணத்துடனும் இருக்கும் செட்டிநாட்டு உணவு வகைகள் தான் இப்பொழுது, 5நட்சத்திர உணவகங்களிளும், கையேந்தி பவன்களிளும் செம ஹாட் and ஹிட்.
என்ன! உங்கள் கணவர், குழந்தைகள் உங்கள் சமையலை பாராட்ட வேண்டுமா?அசைவ உணவாக இருந்தாலும், சைவ உணவாக இருந்தாலும்,

அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சமைக்க வேண்டுமா?அப்படீன்னா மேல படியுங்கள்.முதலில் வருவது செட்டிநாட்டு கோழி [CHETTINAD CHICKEN].
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கி சுத்தம் செய்யப்பட்ட கோழி…………………1/2கி
எண்ணெய்  ………5tbl spoon[அதிகமாக வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்]
பெரிய   வெங்காயம்……..1
தக்காளி  …….2
வெங்காயத்தையும்,தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

மசாலா அரைக்க:[GRIND TOGETHER]

தக்காளி…..1
சி.வெங்காயம்….2-5
இஞ்சி…….1சிறிய துண்டு
பூண்டு பல்….5-7
மல்லி விதைகள்
[CORRIANDER SEEDS]….2tsp
வர மிளகாய்…….6-8[உங்கள் தேவைக்கேற்ப]
சோம்பு…..1tsp
சீரகம்…..1tsp
மிளகு…..2tsp
ஏலக்காய்  …2-3
கிராம்பு…2-3
பட்டை…சிறு துண்டு
மஞ்சள்தூள்…1tsp
உப்பு….தேவையான அளவு
சமைக்கும் முறை:[METHOD]
*  மேலே கூறிய அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

*இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணையை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும்.பின்பு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
*இத்துடன் கோழியை சேர்த்து 5 நிமிடத்திற்க்கு நன்கு வதக்கி ,அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து  சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
[cooker ல் வைத்தால் ஒரு whistle ல் இறக்கி விடலாம்.]
*இறக்கியவுடன் ,சிறிதளவு எண்ணெயில் சிறிது சோம்பு, 2-3பச்சை மிளகாய்,கறி வேப்பிலை.கொத்தமல்லி இலை போட்டு தாளித்து கோழியுடன் சேர்த்தால் கமகம செட்டிநாடு சிக்கன் தயார்.

diet-B

Advertisements