இந்தியா முழுவதும் முருங்கை மரம் காணப்பட்டாலும் தென்னிந்திய வீடுகளின் கொல்லைப்புறத்தில் நிச்சயம் காணப்படும் .முருங்கைக் காய் சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்கிறது. நாம் முருங்கை காய் சேர்க்கும் அளவிற்கு முருங்கைக் கீரையை
பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை.
முருங்கை கீரையில் வைட்டமின்-எ,சி,சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.
100கிராம் கீரையில் உள்ள சத்துகள்.
புரதம்… 7.4கி

சுண்ணாம்புச் சத்து… 29.5மிகி
இரும்புச் சத்து… 3.6மிகி
கரோட்டீன்… 8.9மிகி
அஸ்கார்பிக் அமிலம்…16.5மிகி
நார்ச் சத்து… 1.2மிகி
கேலரி… 72கேலரி

9முட்டை[அ]1/2கி வெண்ணெய்[அ]80கப் பசும் பால் இவைகளிலிருந்து பெறக்கூடிய வைட்டமின்-A சத்து,1கப் முருங்கை இலைச் சாறில் இருந்துகிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.6எலுமிச்சை[அ]16வாழைப்பழம் [அ]8ஆப்பில் இவற்றில் இருந்து பெறக்கூடியவைட்டமின்-C சத்து கிடைப்பதாகவும்,2முட்டையில் இருந்து பெறக்கூடிய புரதச்சத்து கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வளவு சத்துகளின் புதையலாக விளங்கும் முருங்கைக்கீரையை பொரியலாகவும்,சாம்பார் மற்றும் சூப் வைத்தும் வடை ,அடை,சப்பாத்தி முதலிய சிற்றுண்டிகளில் கலந்தும் சாப்பிட்டு பயன்பெறலாம்.

Advertisements