சினிமாஞ்சலி

 
ரகுவரன் முதன்முதலில் கவனிக்கப்பட்டதுஏழாவது மனிதனில். ஒரு ஒல்லியான உயரமான வித்தியாசமான கதாநாயகனாய் வந்தார். அந்தப் படத்தில் பாரதியார் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதால் அந்நாட்களில் ஒரே ஒரு சேனலாய் இருந்த தூர்தர்ஷனில் அடிக்கடி அந்தப் பாட்டுகள் ஓளிபரப்பப்பட்டு ரகுவரன் கவனிக்கப்பட்டார். அந்தக்காலத்து முண்ணனி கதாநாயகிகளில் ஒருவரான சுமலதாவுடன் இவர் நடித்ததலையைக் குனியும் தாமரையேமறக்க முடியாத பாடல். பின்னர் ரகுவரன் மெல்ல மெல்ல கமர்ஷியல் சினிமாவின் ஒளி வீச்சைத் தாங்க முடியாமல் டி.வி பக்கம் ஒதுங்கினார். சிவசங்கரியின்ஒரு மனிதனின் கதைடிவி தொடர் ஆனபோது ரகுவரன் சிவசங்கரியின் கதாநாயகனுக்கு உயிர் கொடுத்ததை எல்லாருமே பாராட்டினார்கள். எவ்வளவு சிறந்த நடிகர் ரகுவரன் என்பது கவனிக்கப்பட்டது அப்போதுதான். அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்இந்த முறை வில்லனாய். மக்கள் என் பக்கத்தில் சத்யராஜுக்கு அந்தப் பக்கம் நிழல்கள் ரவி. இந்தப்பக்கம் ரகுவரன் என மீண்டும் கவனிக்கப்பட்டார். தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பு. ராம்கோபால் வர்மாவின்ஷிவா” (தமிழில்உதயம்”) படம் ரகுவரனை நம்பர் ஒன் வில்லனாய் தூக்கி நிறுத்தியது. “ஷிவாபெயர் ராசியோ என்னவோ தமிழில் ரஜினி நடிக்க அமீர்ஜான் இயக்கிய  சிவா படத்தில் ரஜினியின் நண்பனாய் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். கமர்ஷியல் படங்களில் தன்னை முழுமையாக அடையாளப் படுத்திக் கொண்டாலும் அவரின் ஆர்ட் ஃபில்ம் மோகம் அவரை நடு நடுவேகூட்டுப் புழுக்கள்போன்ற தரமான படங்களில் நடிக்க வைத்தது. கூடவே சத்யராஜ் வில்லனிலிருந்து ஹீரோவாய் பிரகாசிக்க ஆரம்பித்ததும் தமிழ் திரையுலகம் ரஜினி, சத்யராஜ் என அடுத்தவில்லன் டு ஹீரோரகுவரனாய் இருக்கக்கூடும் என்று நம்பிமைக்கேல்ராஜ்போன்ற சோதனை முயற்சிகளை செய்து கையை சுட்டுக் கொண்டது
 அதே சமயம்புரியாத புதிர்போன்ற வித்தியாச படங்களில் ரகுவரன் தனக்கென்று நோ நோஎன்று ஒரு புது ரகுவரன் ஸ்டைலையே உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்தப்படத்தில் அவர் எத்தனை முறை நோசொல்கிறார் என்று ஒரு போட்டியே வைத்தார்கள். இதற்கிடையேசம்சாரம் அது மின்சாரம்போன்ற குடும்ப படங்களிலும் ரகுவரன் இருந்தார். ரகுவரனை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியதுபாட்ஷாபடம். ரஜினிக்கே அந்தப் படம் ஒரு மைல்ஸ்டோன். ரஜினிக்கு ஈடுகொடுத்து நடித்து தனி முத்திரை பதித்தார் ரகுவரன். அப்போதிருந்தே ரஜினி படமென்றால் ரகுவரன் அதில் வில்லனாகவோ குணசித்திர நடிகராகவோ நிச்சயம் இருக்கும்படி ரஜினி பார்த்துக் கொண்டார். இதுசிவாஜிடாக்டர் வேஷம் வரை தொடர்ந்தது.  

ஏனோ இன்னொரு சிகரமான கமலஹாசன் படத்தில் கடைசிவரை ரகுவரன் நடித்ததேயில்லை. ரகுவரன் நடிப்பில் கூட நடிப்பவரை தூக்கி சாப்பிட்டு விடுவார், அதனால்தான் கமல் அவரைக் கூப்பிடவேயில்லை என்று முனகுபவர்கள் கூட உண்டு. ரகுவரன் கொஞ்சம் கொஞ்சமாய் வில்லன் பாத்திரம் மட்டுமல்லாது குணசித்திர வேஷத்திலும் கவனம் செல
த்தியது
மணிரத்னத்தின்அஞ்சலியில் இருந்துதான். அதில் ஒரு தந்தை தனக்குள் தன் மகளைப் பற்றி மறைத்து வைக்கும் வலியை ரகுவரனைத் தவிர யாராலாவது காட்ட முடியுமா என்று தெரியவில்லை. விஜய் படமானலவ் டுடேயில் தந்தையாய் வந்து எல்லாருடைய மனதிலும் இடம்பிடித்து அப்புறம் பல படங்களில் கதாநாயகனின் தந்தை ஆனார். கூடவே ரகுவரனுகென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. கல்லூரி மேடைகளில் ரகுவரன் குரலில் பேசாத மிமிக்ரி ஆர்டிஸ்ட் கிடையாது.  
இப்படி நடிப்புலகில் வெற்றி பவனி வந்து கொண்டிருந்தாலும் சொந்த வாழ்க்கையில் சறுக்கல்களுக்கு பஞ்சம் இல்லை. “ஒரு மனிதனின் கதையில்அவர் நடித்த பாத்திரமாகவே நிஜ வாழ்க்கையில் மாறிக் கொண்டிருந்தார் ரகுவரன். ஆமாம், குடியும் போதையும் அவரை கீழே இழுத்துக் கொண்டிருந்தது. சிந்துஜா என்ற நடிகையுடன் ( பாக்யராஜின் “ சுந்தர காண்டம்“ என்ற படத்தின் கதாநாயகி) திருமணம் இல்லாமலே குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு திடீரென்று நடிகை ரோகிணியை மணமுடித்துக் கொண்டார். இடையில்பாபாஎன்று ஆன்மீகமும் பேசினார். அப்புறம் ரோகிணியுடன் விவாகரத்து. மதுவில் இருந்து வெளிவர ட்ரீட்மென்ட் என்று அந்தக் கலைஞனின் வாழ்க்கை கல் விழுந்த கண்ணாடியாகவே இருந்தது. திரையுலகின் கடைசி படமாய்யாரடி நீ மோகினியில் தனுஷின் அப்பாவாய் வந்து எல்லார் மனதையும் கொள்ளை கொண்டு அந்தப் படத்தில் காட்டப்பட்டதைப் போலவே படத்தில் மாலை போட்டுக் கொண்டு மறைந்தார் ரகுவரன். தமிழ்த் திரையுலகில் ரகுவரனுக்கு என்றும் நீங்காத இடமுண்டுரகுவரன் மேலிருந்து நோஎன்று அவர் பாணியில் விரல் தூக்கி சொல்வதாய்த் தோன்றுகிறது!
Advertisements