இப்பொழுது நாம் பார்க்கப் போவது ஊட்டி ரயில் நிலையம். மெல்லிய தூறல் கொஞ்சம் கொஞ்சமாய் மழையாய் மாறிக்கொண்டிருக்கும் நேரம். தன் தாயை ரயிலேற்றிவிட்டு திரும்பும்போதுதான் அந்த இளைஞன் தன் காதலியைப் பார்க்கிறான். சாவை சந்தித்த காதலர்களைப் பற்றி சரித்திரம் சொல்லும். ஆனால் சாவை எதிர்பார்த்தவர்கள் சந்தித்துக் காதலித்ததாய் சாதித்த கதை இவர்கள் கதை.
ஆமாம், “காதலர்கள் சாகப் போகிறார்கள்என்று கதைகளில் படித்திருப்போம். ஆனால் சாகப் போகிறவர்கள் காதலிக்கிறார்கள் என்று எங்கேயாவது கேட்டதுண்டா? அவள் உயிர் போகப்போவது மட்டுமே தெரிந்த  அவளுக்கு அவள்உயிர்அவன் போகப்போவது தெரிந்த்தும் துடிதுடித்துப் போய் அவனை பார்க்க வந்திருக்கிறாள்
இந்த மரம் சாகப் போகுது. அந்தக் கொடி சாகப் போகுது. அதோ அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருநாள் சாகப் போகிறார். நானும் சாகப் போறேன்!” அவளுடைய வார்த்தைகளிலேயே அவன் பதிலளிக்கிறான். தன் சாவைப் பற்றியே சலனப்படாத அந்த கீதாஞ்சலியால் அவன் முடிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “ஓடிப் போலாமா?” என்று கேட்டவள் அவன் தனை விட்டு ஓடிப்போய்விடுவான் என்பதை ஒருநாளும் நினைக்க முடியவைல்லை. “இதயத்தை திருடாதேஎன்று சொல்லிக் கொண்டே நம் இதயங்களைத் திருடியது இந்த மணிரத்னத்தின் மகத்தான படைப்பு!
Advertisements