செட்டிநாட்டு சமையலில் நாம இப்ப பாக்கப்போறது செட்டிநாட்டுக் கோழி ரசமும்,மிளகு போட்டு வறுத்த கோழியும்.என்ன! பேரை கேட்டவுடனேயே சும்மா அதிருதா! சாப்பிட்டு  பாருங்க, சும்மா ஆளையே அசத்தும்.இதோ உங்களுக்காக ரெசிபி.
கோழி ரசம்
[To serve 4]
தேவையான பொருட்கள்:
*நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோழி[எலும்புடன்]—–1/4கி
*மஞ்சள் பொடி————1tsp
*தனி மிளகாய் பொடி—-1tsp
*உப்பு—தேவையான அளவு
*புளி—–நெல்லிக்காய் அளவு
*தண்ணீர்—–4-5 டம்ளர்
ரசப் பொடிக்கு:
*மிளகு————2tbsp
*சீரகம்————-2tsp
*பூண்டு———–2
இம் மூன்றையும் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

செய்முறை:
*குக்கரில் கோழியைப்போட்டு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,உப்பு போட்டு வேக வைக்கவும்.
*இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி          கடுகு,உளுத்தம்பருப்பு,வரமிளகாய்1,கறிவேப்பிலை போட்டு தாளித்து,குக்கரில் உள்ள கோழிச்சாறை ஊற்றி,1 டம்ளர் தண்ணீரில் புளியைக்கரைத்து ஊற்றி,நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு,ரசம் நுரைத்துக்கொண்டுவரும் பொழுது இறக்கிவிட வேண்டும்.
ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம்,அப்படியேயும் குடிக்கலாம்.

மிளகு போட்டு வறுத்த கோழி[PEPPER CHICKEN]
[To serve 4]
தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம்—-பெரியது-1
*தக்காளிபெரியது——1-2
இரண்டையும் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
:மசாலா அரைப்பதற்கு
*சோம்பு——–-1tsp
*சீரகம்————1tsp
*மிளகு————20-25கிராம்
இஞ்சி————–1துண்டு
பூண்டு————-8-10பல்
இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

*pressure panல் 5-6tbsp எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கியவுடன்,தக்காளியைப் போட்டு வதக்கவும்.இக்கலவை நன்கு வதங்கியபின்கோழியைப் போட்டு 5நிமிடத்திற்கு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப்  போட்டு வதக்கி,1/4-1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.1whistleல்இறக்கிவிடலாம்.சாப்பிட்டுப்பாருங்க காரம் கம்மியா இருந்தா சிறிது மிளகு பொடி போட்டுக்கங்க,அதிகமா இருந்தா திட்டாதீங்க கொஞ்சம் எலுமிச்சைசாறு சேர்த்துக்கொள்ளுங்கள்.
diet-B

Advertisements