உணவு தானிய உற்பத்தியில் தற்போதைய தேக்கநிலையை மாற்றி வளர்ச்சிப்பாதையில் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் வேளாண்மைத்துறையைச் சார்ந்த அனைவரும் இருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது . .அதிகரித்து வரும் மக்கள்தொகையும் குறைந்து வரும் விளைநிலமும் 4% வேளாண்மை வளர்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்துகின்றன.
2011-12 ல் நமது உணவு தான்ய தேவை 252 மி.டன்னாகவும்,2020-21 ல் இது 297 மி.டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உணவு தான்ய உற்பத்தியைப் பெருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன?
* வேளாண்மையில் நவீன அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பயிர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கலாம்.நல்ல சாகுபடி முறைகள் சாகுபடிச்செலவை குறைப்பதோடு உற்பத்தியில் நிச்சயமற்ற தன்மையயும் குறைக்கிறது.
* பயிரிடும் பரப்பை அதிகப்படுத்த வேண்டும். அதாவது இரண்டு அலலது மூன்று போக சாகுபடி செய்ய வேண்டும்.
* இறவைப்பாசன சாகுபடிப்பரப்பினை அதிகரிக்க வேண்டும்.
* சிக்கன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர்ப்பாசனம் ,தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் நீர்நிர்வாகம் செய்தல்.
* மண்வளப்பாதுகாப்பு
* புதிய சாகுபடி முறைகளைக்கடைப்பிடித்தல்
(உ-ம்) செம்மை நெல் சாகுபடி,துல்லிய பண்ணையம்,இலைவழி உரமிடுதல்,இயந்திரமயமாக்கல்,வீரிய ஒட்டு விதைகளைப்படுத்துதல் இன்னும் எத்தனையோ
*உரநிர்வாகம்
*ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்
*சந்தைக்கேற்ற விளை பொருள்
*தான்ய சேமிப்பு . சேமித்த தான்யங்கள் உற்பத்தி செய்த தான்யங்களுக்கு சமம்.மேலும் அந்த அளவு நீரும் சேமிக்கப்படுகிறது.
*துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திறன் மேம்பாடு.
* கூட்டுறவு பண்ணையம்
agri S

Advertisements