அந்த ஊட்டி ரயில் நிலையத்தை விட்டு கொஞ்சம் நகருவோமா? ஓர் மண்ணின் மைந்தன் தான் பிறந்த மண்ணிற்காக தேர்ந்தெடுத்த மனைவியுடன் மரித்த தன் மந்தில் வாழ்ந்த காதலியை வழியனுப்ப போகிறான். அவன் ஊருக்கு கொடுத்த வாக்கு அவன் காதலுக்கே கொள்ளியாய்ப் போகுமென்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவைல்லை! இருந்தும் விதியின் பாதையால் விழியில் ஏந்தியவளை அவன் வழியனுப்ப போகிறான்.  
கட்டிய மனைவி காரிலேயே காத்திருக்க, காதலியை அனுப்பிவைக்க அவன் மட்டும் பின் தொடர கிடைத்த அந்த நொடிகளில் அவர்களின் காதலின் கோட்டைக்கு இறுதி அஞ்சலியாய் கன்னத்தில் முத்த்த்தைப் பதிக்கிறாள், அவன் காதலி! அந்தப் பிரிவின் மொத்த சோகமும் அவன் கன்னத்தில் வந்து ஒட்டிக்கொண்ட்தாய் நம் கண்ணுக்குப் படுகிறது. அவனைக் கடைசியாய் பார்த்துவிட்டு காதலி ரயில் பெட்டி கதவை சாத்துகிறாள். இதயத்தில் இடிந்த காதலுக்காக ரத்தக் கறையையும் கன்னத்தில் பிரிந்த காதலுக்காக முத்தக் கறையையும் ஏந்தி அவன் காருக்குத் திரும்புகிறான்.  
அவன் கிராமத்துக்கு கல்வி தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதல் தெரியாமல் இல்லை. கணவனின் கன்னத்தின் கறையை புடவைத்தலைப்பால் துடைத்துவிட்டு அப்பாவியாய் அவள் சொல்லும்லிஸ்ப்டிக்இன்னும் கூட நம் மனதில் வாழ்கிறது. காதலி ஒரு புறமும் கட்டிய மனைவி ஒருபுறமுமாய் தவிக்கும் அந்ததேவர் மகனைநம்மால் மறக்கத்தான் முடியுமா!
Advertisements