ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் , ஐஷ்வர்யா நடிக்கும் எந்திரனைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம் :

 • எந்திரன் படத்தில் படம் முடியும் வரை சம்பளம் வாங்காவிட்டாலும் படம் முடிந்தபின் ரஜினி வாங்கிய சம்பளம் இதுவரை ஜாக்கி சான் உட்பட ஏசியாவிலேயே எந்த நடிகரும் வாங்காத சம்பளம் . கிட்டத்தட்ட 100 ___ தொடும்….
 • எந்திரன் முடிந்த கையோடு தன் இரண்டாவது தயாரிப்பின் தயாரிப்பு செலவு கடனை எல்லாம் சூப்பர் ஸ்டார் ஒட்டு மொத்தமாய் அடைத்துவிட்டார். வட்டியாவது கிடைக்குமா என்று இருந்த ஃபைனான்ஸ் பார்டிகளை வட்டியும் முதலுமாய் அசத்தி விட்டார் சூப்பர் ஸ்டார். “பெரிய மனுஷன் பெரிய மனுஷன்” தாம்பா என்று பெட்டியோடு பாராட்டுகிறார்கள் ஃபைனான்சியர்கள்.
 • இரண்டாவது தயாரிப்பை இத்துடன் எச்சரிக்கையாய் இருக்கும்படி சொன்னதோடு செப்டம்பர் நடக்கும் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
 • எந்திரனில் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளமும் ஏசியாவிலேயே எந்த இசையமைப்பாளரும் தொட முடியா லெவல்! கிட்டத்தட்ட 10 ____
 • எந்திரனைப் போல் எந்தப் படத்துக்கும் ரஜினி இத்தனை விதமான மேக்கப் போட்டதில்லை! மொத்தம் 50 கெட்டப்புக்களைத் தாண்டுமாம்…
 • எந்திரனைப் போல் எந்தப் படத்திலும் ரஜினி நடனத்துக்கு இத்தனை முறை ட்ரயல் பார்த்ததில்லையாம்..
 • எந்திரனில் வருகிற சில ரோபோ மேன்னரிசங்களுக்காக ரஜினி ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். தன் ஜப்பானிய நண்பர்கள் உதவியுடன் ரோபோக்களின் செயல்முறையை மணிக்கணக்காக அப்ஸர்வ் செய்திருக்கிறார் ரஜினி.
 • ஷங்கரைப் பொறுத்தவரையில் எந்திரன் அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு போகப் போகும் படம் என்றே நினைத்திருக்கிறார். ஷாரூக் கானுக்கும் கமலுக்கும் பிரத்யேகமாக படத்தைப் போட ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு வேளை அவர்கள் நிரகரித்ததால் அப்படியோ தெரியவில்லை.
 • ரஜினி “சிவாஜி”க்கு செய்தது போலவே கலைஞர், ரோசைய்யா, மற்றும் அசோக் சவான் ஆகியோரின் அப்பாயின்மென்ட்களை வாங்கி வைத்து விட்டார். அவர்களுக்கு ரஜினியே பிரத்யேகமாக படத்தை திரையிட்டுக் காட்டுவார். எந்திரனுக்கும் ரோபோவுக்கும் தங்கு தடையில்லாமல் தியேட்டர்களில் டிக்கெட் விலை வைக்கவும் எக்ஸ்ட்ரா சீட்களை அந்தந்த மாநில போலீஸ் கண்டும் காணாமல் போகவே இந்த ஏற்பாடு.
 • சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு எந்திரன் ஒரு ஜாக்பாட். ஹிந்தியிலும் தெலுங்கிலும் இவ்வளவு விலை பேசப்படும் என்று அவரே எதிர்பார்க்கவில்லையாம். அது போனஸ்…
 • இதுவரை எந்த தமிழ்படத்திலும் ஏன் இந்தியப் ப
  டத்திலும் இல்லாத அளவுக்கு எந்திரன் க்ளைமேக்ஸ் மிரட்டுமாம்…இதற்காக மட்டுமே சில பல கோடி மதிப்பான செட்களை “எந்திர” ரஜினி அழிப்பாராம்..
 • ஐங்கரனுக்கு கூட பேசப்பட்ட தொகையை விட கொஞ்சம் தாராளமாகவே தந்திருக்கிறது சன்..
 • கை மாற்றப்பட்ட பணத்திலும் பேசப்படுகிற விலையிலும் எந்திரன் இந்திய திரைப்படத்தின் மிகப்பெரிய “கேம்பிள்” …எந்திரன் வெல்வானா?
Advertisements