உங்க BMI 25க்கு மேலேயும் ,வயது 30க்கு மேலேயும் இருந்தா கண்டிப்பா உங்க வாழ்க்கை முறையையும்,உணவு முறையையும் மாத்திக்கனுங்க.ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிட்டு,தினமும் 30-45 நிமிடம் உடற் பயிற்சி செய்யவேண்டும்.முக்கியமா துரித உணவுக்கு தடை போட வேண்டும்.
HOW TO EAT SLIM:
அளவை குறைக்க:[TO CUT DOWN PORTION]
*சாப்பாட்டுக்கு முன்னர் 1-2 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
*சாப்பிடும் பொழுது முதலில் ஒரு பழம்,ஒருசாலட்,1டம்ளர்மோர்[OR]சூப்,பிறகு
நம் தினப்படி உணவில் உள்ள காய்கறிகள் ,அப்புறம் கடைசியாக சாதம்.இப்படி சாப்பிடும் பொழுது சாதத்தின் அளவு கணிசமாக குறைந்துவிடும்.
மேலும் உணவுப் பொருள் ஒவ்வொன்றுக்கும் செரிமானமாகக் கூடிய நேரம்
வித்தியாசப்படும்.பழங்கள் விரைவாக செரித்துவிடும்,அதனால் தான் FRUITS FIRST.
*சின்ன தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மெதுவாக சாப்பிடவேண்டும்.

இனிப்பை குறைக்க:[TO CUT DOWN SUGAR]

*இனிப்புகளை குறைப்பது நல்லது.
*பாட்டில்கள் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட
குளிர்பானங்களை தவிர்க்கவும்.
*பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே
சாப்பிடவும்.
உப்பை குறைக்க:[TO CUT DOWN SALT]
*ஊறுகாய்,கருவாடு,சீஸ் போன்ற உணவுகளை குறைப்பது நல்லது.தவிர்த்தால் இன்னும் நல்லது.
கொழுப்புச்சத்தை குறைக்க:[TO CUT DOWN FAT]

*கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்.
*பாலை நன்கு காய்ச்சி ,அதில் படியும் ஆடையை
எடுத்துவிட்டு உபயோகப்படுத்தவும்.
*டீ,காபியை பால் சேர்க்காமல் குடித்துப் பழகவும்.
*எண்ணெய்யில் வறுத்த,பொரித்த உணவுகளை
தவிர்த்து,ஆவியில் வேக வைத்த,grill செய்த உணவுகளை உண்ணலாம்.
*உடமபை குறைக்க நினைப்பவர்களுக்கு ஆட்டுக்கறி,
மற்றும் கோழிக்கறிக்கு மீன் பெஸ்ட்.
EAT MORE FISH.
*NON-STICK,MICROWAVEபோன்ற சாதனங்களை உபயோகப்படுத்தினால் நாம்
உபயோகிக்கும் எண்ணெய்யின் அளவை குறைக்கலாம்.
*முட்டையில் மஞ்சல் கருவைதவிர்க்கலாம்.

*துரித உணவை தவிர்க்கவும்

TO INCREASE FIBRE CONSUMPTION:
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*நிறைய பழங்கள் சாபபிடவும்.

*நிறைய காய்கள்,கீரைகளை சேர்த்துக்கொள்ளவும்.பச்சையாக சாப்பிடக்கூடிய காய்களை சாலடாக சாப்பிடவும்.
வீட்டில் உள்ள நொறுக்கு தீனிகளை SEE THROUGH டப்பாக்களில் போடாமல்,OPAQUE டப்பாக்களில் போட்டு வைக்கவும்.அப்ப தான் tempt ஆக மாட்டோம்.கடைசியாக ஒண்ணே ஒண்ணுங்க,தேவைக்கு சாப்பிடுங்க,ஆசைக்கு
சாப்பிடாதீங்க.”EAT FOR NEED NOT GREED”.அடுத்தது COOK SLIM.
diet-B

Advertisements