தேவையான பொருட்கள்
· மாசிக்கருவாடு-50 gm.
· சின்ன வெங்காயம்-3-4கப்
· தக்காளி-1-2
· பச்சை மிளகாய்-4-5
· தனிமிளகாய்தூள்-1tsp (தேவைக்கேற்ப)
· மஞ்சள் தூள்-1 சிட்டிகை
· உப்புதேவைகேற்ப
செய்முறை:
மாசிக்கருவாடு மரக்கட்டை மாதிரி இருக்கும். அதை அம்மியில் வைத்து தட்டி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்ஸியில் போட்டு தூளாக்கி கொள்ளவேண்டும். பிறகு பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, .மிளகாய் அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இருப்பு சட்டியில் 3 tbs எண்ணெய் விட்டு சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, .மிளகாய் மூன்றையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளிப் போட்டு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள்ப் போட்டு ஒரு கிண்டு கிண்டிவிட்டு, தூளாக்கிய மாசிக்க்ருவாடை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் நிச்சயம் சமையல் செய்த நபருக்கு பாராட்டும், கைக்கு வைரக்காப்பும் கிடைக்க வாய்ப்புண்டு.
diet B
Advertisements