மேஸ்ட்ரோ இளையராஜா நான்காவது முறையாக தேசிய விருதினை வென்றிருக்கிறார். நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்ட முடிவுகளில் “பழசி ராஜா” என்ற மம்மூட்டி , சரத்குமார் நடித்த மலையாளப் படத்திற்காக இந்த விருதினைப் பெறுகிறார் இளையராஜா. ஏற்கனவே மூன்று முறை இளையராஜா இந்த விருதினை வென்றிருக்கிறார்.

முதல் முறை சாகர சங்கமம் என்ற தெலுங்கு படத்திற்காக 1984 ஆம் ஆண்டு விருதினை வென்றார். இதே படம் தமிழில் சலங்கை ஒலி என்று டப் செய்யப்பட்டு தமிழிலும் பாடல்கள் ஹிட் ஆகின. இரண்டாவது முறையாக “சிந்து பைரவி” தமிழ் படத்திற்கு 1986ம் ஆண்டு இந்த விருதினை வென்றார். இது கே.பாலசந்தர் இயக்கிய படம். மூன்றாவது முறையாக ருத்ர வீணா என்ற தெலுங்கு படத்திற்கு 1989 ம் ஆண்டு இந்த விருதினை வென்றார். இதை இயயக்கியவர் கே.பாலசந்தர் தான். பின்னாளில் இந்த படம் இதே மெட்டமைத்த பாடல்களோடு “உன்னால் முடியும் தம்பி” என்று கமல் நடிக்க தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

பிறகு நெடுநாள் இளையராஜா தேசிய விருதைப் பெறவில்லை ( இல்லை… தேசிய குழு இளையராஜா என்ற மாமேதையை மறந்து விட்டார்கள் போல!) . இப்போது பல வருடம் கழித்து இளையராஜா இந்த விருதினை வென்று “ராஜா ராஜாதான்!” என்று நிரூபித்து விட்டார். நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தான் தொடர்ந்து நல்ல இசையை வழங்குவேன் என்றும் நல்ல இசையைத் த்ருவதுதான் முக்கியம் விருதுகள் அல்ல ! ” என்று தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.  நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் இசையின் ராஜா இளையராஜாதான்!

Advertisements