காவலன் விஜய் – கட்டாயம் ஹிட்?
“காவலன் தான் படத்தின் பெயர்; காவல்காரன் என பெயர் வைக்க நினைத்தோம் . ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் பெயர் வைக்க முடியவில்லை. அதனால் படத்தின் பெயர் காவலன் தான்” என விஜய் இப்போது தெளிவு படுத்தியிருக்கிறார்.
சமீப காலமாக தோல்வி படங்களால் துவண்டு போயிருக்கும் விஜய்க்கு காவலன் படம் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திக் இயக்கத்தில் “ஃப்ரண்ட்ஸ்” படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் காவலன்.
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான “பாடிகார்ட்” என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் காவலன். மலையாளத்தில் திலீப் நயனதாரா நடித்திருந்தார்கள்.
காமெடி தூக்கலான “பாடிகார்ட்” கதை மலையாளத்தில் நல்ல கலக்ஷன் பார்த்தது. ஏற்கனவே சித்திக் இயக்கத்தில் ஃரெண்ட்ஸ் படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார் விஜய். அதே மாதிரி இதிலும் காமெடிக்கு முக்கிய பங்கு. மலையாளத்தில் நயனும் காமெடியில் தூள் கிளப்பியிருப்பார். ஏற்கனவே கஜினியில் காமெடியில் கலக்கிய அசினுக்கு இது சவாலான ரோல்தான். அசினும் நயனை விட ஒரு படி மேலே கலக்க முயன்று வருகிறார்.காவலனில் ராஜ்கிரண் ஒரு முக்கிய பாத்திரத்தில் வில்லேஜ் தாதாவாக வரிகிறார்.
தன் சின்ன வயதிலிருந்தே வீர தீர சாகசங்கள் செய்பவர்களை நேசிக்கும் ஒரு கதா பாத்திரத்தில் விஜய் வருகிறார். அப்படி ராஜ்கிரணைப் பார்த்து நேசித்த விஜய் அவரின் பாடி கார்டாக சேருகிறார். பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் ராஜ்கிரன் மகள் அசினின் பாடிகார்டாக ஆகிறார் விஜய். அவர் சந்திக்கும் சவால்கள்தான் கதை.
போக்கிரி, சிவகாசிக்குப் பிறகு விஜய்யுடன் அசின் இணையும் மூன்றாவது படம் இது. அசின் விஜய்க்கென்றே உள்ள ஒரு தனி கெமிஸ்ட்ரிக்கு எப்போதுமே ரசிகர்கள் உண்டு. அது இந்தப் படத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா.
ஆக மொத்தம் , விஜய் இந்த முறை ஒரு வெற்றிக் கூட்டணியில் இணைந்திருக்கிறார். ஒரு சூப்பர் டூப்பர் காமெடி ஹிட்டுக்கு தயாராவோம்!
காவலன் படத்தின் விமர்சனம் படிக்க….காவலன் விமர்சனம்
[stextbox id=”info”]இது காவலன் படத்தைப் பற்றி மூன்றாம் கோணத்தில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட பதிவு… பாருங்க.. இப்போ படம் வந்து இத நிஜமாக்கிடுச்சு![/stextbox]
Advertisements