காமன்வெல்த் கேம்ஸ் காமெடி கலாட்டா

என்னா இப்டி குத்துற ? அப்புறம் சுரேஷ் கல்மாடியைக் கூப்பிட்டுருவேன். அவர்தான் எவ்வளவு குத்துனாலும் பதவிய வுட்டு நகராம எல்லாத்தையும் தாங்குவாரு!

அங்க ஆயிரம் கோடி செலவு பண்ணப்புறமும் பில்டிங் எல்லாம் இட்ஞ்சு விழுது. என்னோட ஐஞ்சு கோடி ட்யூன் கொஞ்சம்  சரியா இல்லன்னா இப்ப என்னாப்பா?

எல்லாரும் எங்க ஓடுறாங்க? 100 மீட்டரா 200 மீட்டரா?
அட நீ வேற அந்தப்பக்கம் ஸ்டேடியம் இடிஞ்சு விழுதுன்னு இப்படி ஓடுறாங்க!

என்னப்பா இந்தப் புலி ரெண்டு விரலைக் காட்டுது. அப்புறம் கலைஞர் சோனியாவுக்கு லெட்டர் எழுதிடப் போறாரு!
இன்னாங்க அப்டி பாக்குறீங்க? “காமன்”  “வெல்த”  “கேம்ஸ்” . அதனாலதான் அதிகாரிங்க எல்லாம் காம்னா கேம் ஆடி வெல்த் சம்பாரிச்சுட்டாங்க!
Advertisements