கலர்ஃபுல் கவணரிசி

செட்டிநாட்டு இனிப்பு பலகார வகைகளில் முக்கியமானதும், தொன்மையானதும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவதும் அனைத்து இனிமையான தருணங்களிலும் தவறாது இடம் பெறுவது கவணியரிசியே.
                கறுப்பு கலந்த கத்தரிப்பூ நிற அரிசி(purple), பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அழகுடன் ஆரொக்கியமும் நிறைந்தது. இதில் anthacyanin என்னும் anti-oxidant அதிகளவில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது நோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட antioxidant ஆகும். மேலும் இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் vitamin-E ஆகியவை அதிக அளவில் உள்ளன.


கவணியரிசி தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கவணியரிசி – 1 உழக்கு
தேங்காய் – 1 மூடி
சீனி-1-1/4 உழக்கு
நெய்- 4-5 tbspoon


செய்முறை: 

கவணியரிசியை முதல் நாள் இரவே நன்கு கழுவி ஊற வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் குக்கரில் அரிசியை போட்டு 3 1/2 உழக்கு தண்ணீர் வைத்து 20நிமிடம் வேகவிடவேண்டும். வெந்தவுடன் தேவையான அளவு சீனி, தேங்காய் துருவல், நெய் மூன்றையும் கவணியரிசி உடன்  கலந்தால் சுவையான சத்தான கவணரிசி ரெடி.

By
dietB

Advertisements