எந்திரன் திரை விமர்சனம்
கடைசியில் அடித்துப்பிடித்து எந்திரன் படம் பார்த்தாகிவிட்டது. ( ஆத்தா நானும் பாஸாயிட்டேன்கொஞ்சம் லேட்டா!) படம் பார்த்தப்புறம் அடுத்த வேலை என்னஏதோ ரஜினி, ஷங்கர் எல்லாம் என் விமர்சனம் படிக்க வெயிட்டிங்ல இருக்கற மாதிரி ஒரு விமர்சனத்தை எழுதிப் போட வேண்டியதுதானே! ( அதான சார், இன்றைய பதிவிலக்கணம் ) . ஆனா ஆரமபத்திலேயே சொல்லிடறேன்.. ரஜினி பின்னிட்டாரு ஷங்கர் பெடலெடுத்துட்டாருன்னெல்லாம் படிக்க ஆசைப்பட்டு இதை படிக்க ஆரமபிப்பவர்களுக்குஅண்ணாஇது அப்படி இல்லங்கண்ணாமன்னிச்சுக்கங்க!

எந்திரன்……கிட்டத்தட்ட மூன்று வருட பிரசவத்திற்குப்பின் வந்திருக்கும் குழந்தை. வருவதற்கு முன்னேயே குழந்தை பறக்கும், பல்டி அடிக்கும் அப்படி செய்யும் இப்படி செய்யும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைஆனால்…….
முதலில் எந்திரனில் என்னென்ன ப்ளஸ்..
வியக்கவைக்கும் ஆங்கில படங்களுக்கு இணையான இந்திய திரையுலகம் இதுவரை பார்த்திராத தொழில்நுட்பம்!
அதிர வைக்கிற கிராஃபிக்ஸ்!… ஹைடெக் காமரா புதுமைகள்!…கண்ணை குளிர வைக்கிற சில லொகேஷன்கள்!
வியக்க வைக்கும் மேக்கப்புகள்! … ரஜினியை இதுவரை பார்த்திராத சில கெட்டப்புக்கள்!
.ஆர்.ரஹ்மானின் தியேட்டரை விசிலடிக்க வைக்கும் பாட்டுகள்!
ஷங்கரின் ஷர்ப்பான வசனங்கள்!
என்ன நக்கலா?
இல்ல நிக்கல்! “
ரோபோ சிட்டி சமையல் செய்து கொண்டு வர
இட்ஸ் கூல்என்று ஐஷ்வர்யா சொல்லநோ ! இட்ஸ் ஹாட்!” என்று சிட்டி சொல்வது
கடைசியில் கொஞ்சம் ஃபிலாஸஃபிக்கலாய் சிட்டி சொல்லும் அந்த
காதலிச்சா நட்டு கழண்டுரும்பாங்கஎங்க்கு நிஜமாவே கழண்டுருச்சு!” என்ற டையலாக்…..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…..
ஆனால் ரஜினி படங்களுக்கே உரிய பன்ச் டயலாக் எதுவும் இதில் இல்லைஒருவேளை இருந்திருந்தாலும் பொருந்தியிருக்காதோ……
சில ஷங்கரின் டைரக்டர் டச்சுகள்…..
வில்லன் டேனி ரோபோ சிட்டியை சோதிக்க கொடுக்கும் சில கமாண்டுகள்……”
சிட்டி ரோபோ மேக்னெட்டால் காட்டும் அந்த ஆத்தா கெட்டப்!”
ரோபோ சிட்டி தீ ஆபத்திலிருக்கும் பெண்ணை மானம் என்றால் என்னவென்று தெரியாமல் காப்பாற்றுவது
வில்லன் ரோபோ சைன்டிஸ்ட் ரஜினியிடம் கேட்கும் அந்ததலை சுத்துதாஇப்ப சுத்தும்!” என்ற புத்திசாலித்தனம்…..
சிட்டிலோ பேட்டரிமின்சார ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டு அங்கே சார்ஜ் செய்து கொள்வது“……
இப்படி படம் நெடுகிலும் ஷங்கர் நடு நடுவே தன் முத்திரையைப் பதிக்கிறார்!
சரிஆனாலும் எந்திரன் திருப்தியளிக்கிறதா……..
படத்தில் தேவையில்லாத நெருடல்கள் நிறைய….
அந்த ரங்கூஸ்கி கொசு காட்சி எதற்கு ஷங்கர்? உங்களால் கொசுவை கிராஃபிக்ஸ் பண்ண முடியும் என்று காட்டவா?
கலாபவன் மணி ஒரு காட்சியில் வந்து அருவா காட்டிவிட்டு போகிறாரே அது எதற்கு? ரீல் நிரப்பவா?
படத்தின் சில லாஜிக் ஓட்டைகள்

வில்லன் டேனி டெட் சிப்பை பொருத்தும் முன்னே சிட்டி ரயிலில் அத்தனை பேரை புரட்டி எடுப்பது எப்படி?

அவ்வளவு பெரிய சைன்டிஸ்ட் வசீகரன் இப்படியா ஏதோ பொம்மையை தூக்கி எறிவதைப் போல சிட்டியை உடைத்து குப்பைத்தொட்டியில் போட்டு விடுவார்… அவருக்கு அதன் ந்யூரல் ஸ்கீம் அதில் அப்படியே இருக்கும் என்று தெரியாதா?
அதெல்லாம் விடுங்கஷங்கர் படம் என்றால் காமெடிக்கென்று ஒரு தனி இடம் இருக்கும் உங்கள்ஜலபுல ஜெல்ஸ்ஆகட்டும்குட்மார்னிங் ஆஃபிசர்ஆகட்டும்லேட்டஸ்ட் சிவாஜியில் விவேக்கும் ரஜினியும் ஷ்ரயாவிடம் சென்சஸ் எடுப்பதாகட்டும்இப்படி காமெடியில் கலக்கும் நீங்கள் இந்தப் படத்தில் ஒருத்தருக்கு ரெண்டு பேர் இருந்து அவர்களை கிட்டத்தட்ட வில்லன் டேனியின் கையாட்களாக பயன்படுத்தியிருக்கிறீர்களே .. இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது!
எல்லா படத்திலும் சிரிக்க வைக்கும் ரஜினிக்கும் இதில் காமெடிக்கு எந்த ஸ்கோப்பும் இல்லைஒரு ரோபோ ரஜினியையும் இரண்டு கமெடியன்களையும் வைத்து காமெடியில் விளையாடியிருக்கலாமே ஷங்கர்உங்களுக்குத் தோன்றியதெல்லாம்எங்க கிட்ட இருக்கற ஒண்ணு உன் கிட்ட இல்ல !” என்ற அந்த இரட்டை அர்த்த வசன்ம்தானா?
ரஜினி ரசிகர்கள் பாவம்எந்திரனுக்காக மூன்று வருடங்கள் காத்திருந்தார்கள். ஆனால் இதில் எதற்கு ரஜினி என்றே தெரியவில்லையேஅந்த பொம்மை ரோபோவாகட்டும்சாஃப்டான சைன்டிஸ்டாகட்டும்.. ஒரு அர்ஜுனோ சரத்குமாரோ போதுமேசூப்பர் ஸ்டார் எதற்கு……கொஞ்சமே கொஞ்ச நேரம் வில்லன் ரோபாவாய் கலக்கி அதிலும் அந்தரோபோஎன்று சொல்லும் இடத்தில் மட்டும் தானிருக்கிறேன் என்று காட்டுகிறார் ரஜினி…… ஸ்டைலாவது தனித்துவமாவது ……. ஷங்கரின் கமாண்டுகளைக் கேட்கும் ரோபோ ரஜினிதான் இதில்! ரஜினி சார்இத்ற்கா உங்கள் ரசிகர்கள் மூன்று வருஷம் காத்திருந்தார்கள்?
ஐஷ்வர்யா இப்போதெல்லாம் எல்லா காட்சிகளிலும் தன் மார்பழகை காட்டுவதாய் கங்கணம் கட்டிக் கொண்டு நடிப்பதைப் போல தெரிகிறது. நிச்சயதார்த்தத்தில் புடவை கட்டிக் கொண்டு மாமனாரிடம் பேசும் காட்சி உட்பட…..! மற்றபடி நடிப்பதெல்லாம் எதற்குநல்ல ரோபோவைப் பார்த்துசோ ஸ்வீட்என்பது கெட்ட ரோபோவைப் பார்த்து பயந்துசோ பேட்என்பது… “ஸோ சாரி ஐஷ்வர்யா!”
ஆஸ்கார் வின்னர் .ஆர்.ஆர் பாட்டு மட்டும் போதுமென்று விட்டு விட்டார் போலிருக்கிறது. ரீ ரெக்கார்டிங்கில் கலக்க வேண்டிய பல காட்சிகளில்அரிமா அரிமாபாட்டை உல்டா செய்ததோடு சரி!
ஆனாலும் எந்திரன் ஹிட்டாகும்.. ரோபோ கடைசியில் அந்த ஃபார்மேஷன் காட்டி பாம்பாய் ராட்சனாய் மாறி எல்லாரையும் கலக்கடிப்பதற்கே எல்லா குழந்தைகளும் பார்க்கலாம். குழந்தைகளோடு பெரியவர்களும் பார்க்கலாம்.. ஆனாலும்…….இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது கதை நாங்கள் மூணாம் கிளாஸ் காமிக்சில் படித்த கதையை வைத்தே எடுத்துஅதிலும் காட்சிக்கு காட்சி எதிர்பார்த்தபடியே நகர்த்தி…… ஷங்கர்……யூ குட் ஹேவ் டன் பெட்டர்! இது தான் சுஜாதா கதையா? சுஜாதாவையும் கேட்க முடியாது!
எந்திரன் ஏமாற்று வித்தைக்காரன்!
Advertisements