நம்ம ஊர்ல நாம கொண்டாடுற கொலு மாதிரியே ஜப்பான்லயும் மார்ச் 3 ஆம் தேதி ஹினாமத்சுரி ங்கிற பொம்மைப் பண்டிகை ரொம்ப விமரிசையா கொண்டாடப்படுது. பெண் குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்காகவும், சந்தொஷத்துக்காகவும் கொண்டாடப்படற இந்தப் பண்டிகை ரொம்ப வண்ண மயமானது. நம்ம ஊர் கொலுவுக்கும், இந்த ஹினாமத்சுரிக்கும் நிறைய ஒற்றுமை! அங்கேயும் 5 அல்லது 7 படிகள், மேல் படியில ராஜா, ராணி பொம்மைகள், அப்படியே படிப்படியா, சமுதாயத்தின் அடித்தட்டு வரையில காட்டப் படுது. சுண்டல் கெடையாதுன்னாலும், அழகழகான அரிசி மிட்டாய்கள் உண்டாம்!

Advertisements