ஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்
தொடர்ந்து ஓட்டப் போட்டு ” ஃபிகர்” பதிவுக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்கு டேங்க்ஸோ டேங்க்ஸ் . ( பெருசா ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ எலக்ஷன்ல ஜெயிச்ச மாதிரி நன்றியுரை கொடுக்கறானேன்னு நினைக்கிறவங்களுக்கு : அப்பிடி எல்லாம் ஏடா கூடமா யோசிக்கப்படாது, ரைட்டா?)
ஏண்டா என்னவோ தொடர்னு ஆரம்பிச்சு ரெண்டு பகுதி போட்டு அப்ஸ்காண்ட் ஆயிட்டியே என்று மெயில் போட்டு “அன்பாய்” விசாரித்த அன்பர்களுக்கு…. அது ஒண்ணுமில்லங்கண்ணா… நாம போட்ட மீனாக்ஷி கேலரி ரொம்ப சிக்கலாகி பல தரப்பிலேர்ந்தும் திட்டோ திட்டு வாங்கி அப்செட் ஆடிட்டேன்.  ஏனுங்கண்ணா, நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லன்னு நாயக்கர் சொன்னாரே, மீனாக்ஷி கேலரியை இதுவரை நாலாயிரம் பேர் பாதிருக்காங்கண்ணா… நாயக்கர் சொன்னது தப்புங்களா? சரி எப்படியோ இப்ப எவ்வளவோ திருந்தி சாந்தினி கேலரி லெவலுக்கு வந்திருக்கேன்..ஓகேவா?
சரி மேட்டருக்கு வர்ரேன்… ஃபிகர்ல நிறைய டைப் இருக்கு. அதத்தான் நாம இப்ப பாக்கப்போறோம்… ( ஹலோ தூத்துக்குடி சிவா… இத “டைப்பான ஃபிகரை பார்ப்பது எப்படி”ன்னோ இல்ல “ஒரு டைப்பா ஃபிகரை எப்படி பார்ப்பது”ன்னோ படிச்சா நான் பொறுப்பில்ல !)
ஃபிகர்ல பொதுவா நாம பார்க்கற சில டைப்ஸ்
1. மூடி டைப் ஃபிகர் : பொதுவா அழகு கூட கூட ஃபிகர் கொஞ்ச்சம் ஜாஸ்தி மூடியா இருக்கும். “ஹே இட்ஸ் டூ பேட் யா, திஸ் இஸ் போரிங்க்யா” னு புலம்பிக்கிட்டே இருக்கும். அந்த பாதிரி ஃபிகரை கவர் பண்ணப் போற பசங்க பண்ணற ஒரு சில்லி மிஸ்டேக் இன்னான்னா , அந்த ஃபிகர் தன்னைத்தான் “போரிங்க்” நு சொல்லுதுன்னு உடனே தாழ்வு மனப்பான்மைல ஃபீல் பண்ண ஆரம்பிப்பதுதான். ஒரு ஃபிகர் புலம்புதுன்னா அத பொறுமையா கேக்கணும் வாத்தியாரே. ஜான் க்ரே “மென் ஆர் ஃப்ரம் மார்ஸ் வுமன் ஆர் ஃப்ரம் வீனஸ்” ல தெளிவா சொல்ற முக்கியமான விஷய்ம் என்னன்னா பொண்ணுங்களுக்கு இந்த புலம்பல் ரொம்ப முக்கியம். அது அவங்களுக்கு கிடைக்கிற ஒரு அவுட்லெட் மாதிரி. ஆக, அந்த மாதிரி புலம்பற ஃபிகர்ட பொறுமையா அது இன்னா சொல்லுது அதுக்கு இன்னா பிரச்சினைன்னு கேளு வாத்தியாரே… ஆனா ஒரே விஷயம், ஜஸ்ட் கேளு… உடனே நீ ஐடியா கொடுக்க ஆரம்பிக்காதே…
செய்யக் கூடாதது :

ஃபிகர் : சே , எங்கப்பா ரொம்ப சோதிக்கறார்… கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிடே இருக்காரு … எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வேற …

நம்ம ஹீரோ : அந்தாள பாக்கும்போதே நினைச்சேன் அவன் ஒரு சரியான சந்தேக கேஸ்னு… உங்கப்பன் இப்பதிக்கு திருந்துவான்னு எனக்கு தோணலே

இப்படி சொன்னா ரொமான்ஸ் அப்பிட் ஆயிடும் வாத்தியாரே.
இன்னொரு தப்பு … அந்த ஃபிகர் பேசும்போது தன்னைத்தான் ஃபிகர் அலுத்துக்குதுன்னு நாமளா நினைச்சு ஃபீல் பண்ணுவது …
செய்யக் கூடாதது :
ஃபிகர் : சே , வர்ரப்பவே ஸ்கூட்டி ப்ராப்ளம்… அப்படி இப்படி பஸ்ஸ பிடிச்சு வந்தா  இங்க பீச்சுல ஒரே வெய்யில். ஏண்டா வந்தோம்னு இருக்கு ….

நம்ம ஹீரோ :ஆமாம், நாங்கூடத்தான் உனக்கு முன்னாடியே இங்க வந்து உக்காந்திருக்கேன்… ஆனா உனக்கு இப்ப ஏண்டா வந்தேன்னு இருக்கு..உ னக்கு எம்மேல லவ்வே போயிடிச்சி…


புரியுதா தலைவா..இப்படி நாமளா ஃபிகரோட ஃபீலிங்க்ஸ் புரிஞ்ச்சுக்காம ஒரு ட்ராக்ல போகக்கூடாது.. இதே சிட்டுவேஷன்ல நாம எப்படி நடந்துக்கணும்னா..

செய்யக் வேண்டியது :

ஃபிகர் : சே , எங்கப்பா ரொம்ப சோதிக்கறார்… கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிடே இருக்காரு … எதுக்கெடுத்தாலும் சந்தேகம் வேற …

நம்ம ஹீரோ : அப்படியா… தட்ஸ் டூ பேட்.. பாவம் நீ….


ஃபிகர் : சே , வர்ரப்பவே ஸ்கூட்டி ப்ராப்ளம்… அப்படி இப்படி பஸ்ஸ பிடிச்சு வந்தா  இங்க பீச்சுல ஒரே வெய்யில். ஏண்டா வந்தோம்னு இருக்கு ….

நம்ம ஹீரோ :எவ்வளோ கஷ்டப்பட்டு எனக்காக வந்திருக்க… …

கொஞ்சம் சினிமாடிக்கா டையலாக் டைப்புல இருந்தாலும் இந்த மாதிரி ஃபிகர் புலம்புரப்போ நாம் நல்ல லிஸடனர்ஸா மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை.
ஃபிகர் டைப்புகள் இன்னும் வரும்…

பின்குறிப்பு :  தலைவா… ஓட்டுப் போட மறந்துடாத ! அப்புறம் ஓட்டுப் போடவே வயசு பத்தல … எப்படி ஃபிகர் பத்தி படிக்கலாம்னு கேட்டுறப் போறாங்க 🙂 வர்ட்டா?
Advertisements