ரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி

( எல்லாம் நம்ம கற்பனை தானுங்க! )


ரஜினி தனியாய் உட்கார்ந்திருக்கிறார். அப்ப உதவியாளர் பக்கத்தில் வருகிறார்

உதவியாளர் : சார்… யாரோ ஷங்கர் ரசிகர் நம்ம எந்திரனை பாராட்டி மெஸேஜ் அனுப்பியிருக்காரு

ரஜினி : (ஆர்வமாய்) என்ன அனுப்பியிருக்காரு, படி படி …

உதவியாளர் : எந்திரன்ல ஷங்கர் இந்தியன் படத்த விட ஒரு படி மேல போயிட்டாராம் சார்

ரஜினி : எப்டி எப்டி?

உதவியாளர் : இந்தியன் படத்துல ஹீரோ தாத்தாவா நடிச்சாராம்… எந்திரன் படத்துல தாத்தா ஹீரோவா நடிக்கிறாராம்…

ரஜினி : (கோவமாய்) தட்ஸ் ஒகே ….வாசல்ல யாரு வரா பாரு

உதவியாளர் : பாஸ், உங்களை பாக்க விஜய்காந்த் வந்திருக்கிறார்…

ரஜினி: (கொஞ்சம் யோசித்துவிட்டு) சரி சரி அனுப்பு…

(மனசுக்குள்… இதென்னடா புதுக்குழப்பம்!)

விஜய்காந்த் : வணக்கம் ரஜினி

ரஜினி : வணக்கம் விஜி… என்ன இவ்வளவு தூரம்..

விஜய்காந்த் : ஒண்ணுமில்ல நம்ம விருத்தகிரி ரிலீசாகுது… அதான் உங்கள பாத்து கொஞ்சம் ஐடியா கேட்டுட்டு போலாம்னு வந்தேன்

ரஜினி: எதுக்கு ஐடியா

விஜய்காந்த் : வயசானாலும் கூட நடிக்காம , டான்ஸ் ஆடாம , ஆனா படத்த எப்படி ஓட்டறதுன்னு ஐடியா கேக்கலாம்னுதான்…

ரஜினி : வாட்?

விஜய்காந்த்: இல்ல இல்ல இப்ப எந்திரன் படம் சூப்பர் ஹிட்டு அதே மாதிரி விருத்தகிரி ஹிட்டாகணும்..அதுக்கு என்ன பண்ணனும்…

ரஜினி: ஹா ஹா ஹாஹ்ஹா விஜி கண்ணா …படமாவட்டும் பக்கத்து வீட்டு பொண்ணாவட்டும் தானா ஓடணும்… நாமளா அது ஓடணும்னு டென்ஷனாவக்கூடாது!

விஜய்காந்த் : அதில்லங்க… இப்ப உங்களையே எடுத்துக்கங்க…பாபா அடி வாங்குனப்புறம் சந்திரமுகில பேய் கதை எடுத்தீங்க இப்ப எந்திரன்ல ரோபோ கதை… இப்படி வித்த
ியாசமா நீங்க எப்படி மாறுறீங்க.. என்னய மட்டும் இந்தப் படுபாவி பசங்க யூனிஃபார்மே கழட்ட உட மாட்டாங்கறானுங்க .. அதுவும் சென்னை வெய்யிலுக்கு இந்த காக்கி ட்ரஸ் எவ்வளவு கடியா இருக்கு தெரியுமா?

ரஜினி : மாறிக்கிட்டே இருக்கணும் விஜி… அரசியலுக்கு வரப்போறேன்னு சொல்லணும்.. அப்புறமா அது நமக்கு செட்டாகாதுன்னு பந்தா காட்டணும்… நடுநடுவுல நேத்து மாங்கா பொறுக்கறவன் இன்னிக்கு மாங்கா ஊறுகா போட்றவன் நாளைக்கு…? அப்டின்னு அப்ப அப்ப டயலாக் உடணும்.. திடீர்னு வெடிகுண்டு கலாசாரம்னு பேசணும்.. அப்புறம் தேர்தல்ல ஓட்ட போட்டுட்டு ரெண்டு விரல் காட்டணும்…மூப்பனாருக்க ாய்ஸ் கொடுக்கணும்.. கலைஞரை மூத்த அரசியல் தலைவர்ங்கணும்.. இப்படி…….எதையோ போட்டு குழப்பிக்கிட்டே இருக்கணும். எந்திரன் முடிஞ்சோன்ன அரசியலுக்கு வர்ரேங்கணும்.. அப்புறம் நான் எந்திரன் பார்ட் 3 சொன்னேன்னு கொக்கு காட்டணும்… இப்டித்தான் மாறிக்கிட்டே இருக்கணும்…

விஜய்காந்த் : (குழம்பி) நாம ஒண்ணு கேட்டா இவரு ஒண்ணு சொல்றாரே…. சரி… விருத்தகிரி படம் ஓட என்னதான் வழி?

ரஜினி : விருத்தகிரியை ஹிந்தில டப் பண்ணிடுங்க பேர வ்ரித் கிர்னு வச்சிக்கலாம்…

விஜய்காந்த் : பட் ரஜினி.. ஹிந்தில என் படத்த பாப்பாங்களா?

ரஜினி : (மனதிற்குள் …தமிழ்ல மட்டும் எவன் பாக்குறான்?…)

சிம்பிள் விஜி…முதல்ல நீங்க பால் தாக்கரேவப் பார்த்து நான் பிறப்பால் தமிழன் வளர்ப்பால் மராத்தின்னு சொல்லிடுங்க. ஒரு பொட்டியத் தூக்கிட்டு அவர பாத்தீங்கன்னா மத்தத அவரு பாத்துப்பாரு…சல்மான்கானை சைனாக்காரன்…அமீர்கானை ஆஃப்கானிஸ்தான்காரன்னு ஏதோ கதை கட்டி அவங்க படம் தியேட்டர்ல்லேர்ந்து தூக்கிட்டு எல்லா தியேட்டர்லயும் நம்ம வ்ரித் கிர்ர போட்டுருவாரு. அப்புறம் தியேட்டருக்கு வர்ரவன் எல்லாம் இதத்தான பாக்கணும்!

(மனதிற்குள்…இப்படியே உளறிட்டுருந்தா ஒடிருவான்)

விஜய்காந்த் : (ரஜினி தன்னை குழப்புவதை கண்டுபிடித்து விடுகிறார்…மனதிற்குள் …என்னையே குழப்புறீங்களா? நான் யாருன்னு காட்டுறேன்..).

மும்பைல இருக்கற தியேட்டர் 3456 அதில ஆபரேஷன் தியேட்டர் 345 ரெக்கார்டிங் தியேட்டர் 543 மீதி 2568 தியேட்டர் சினிமா தியேட்டர்…

ரஜினி காதைப் பொத்திக் கொண்டு ஓடுகிறார்……….

Advertisements