செட்டிநாட்டு பலகார வகைகளுக்கு எப்பவுமே ஒரு தனி செல்வாக்கு உண்டுங்க.அதுவும் இந்த வெள்ளப் பணியாரத்துக்கு நிறைய பேர் அடிமை.எங்க பக்கத்துல  வெள்ளப் பணியாரம் இல்லாம விஷேஷமே இல்ல.இதோட சுவை  ரொம்ப அலாதியானது.வெள்ளப் பணியாரத்துக்கு, மிளகா துவையல தொட்டு சாப்டோம்னா சும்மா சூப்பரா இருக்கும்ங்க!!.இதோட ரெசிபிய இங்க தரேங்க.நீங்க வேணும்னா இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி—2 உழக்கு
உளுந்து—1/4உழக்கு
உப்பு–தேவையான அளவு.
             அல்லது
1உழக்கு பச்சை அரிசியை தலை தட்டி எடுத்துக்கொண்டு அதன் மேல் கோபுரமாக உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இது போல் 2 உழக்கு எடுத்து 
2-3 ம்ணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.பிறகு கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள 
வேண்டும்.
செய்முறை:
1/2 ம்ணி நேரம் கழித்து ,இருப்பு சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி,நன்கு காய்ந்ததும்,தீயை சற்றே குறைத்து வைத்துக் கொண்டு,ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.ஊற்றிய ஓரிரு வினாடிகளில் ,பணியாரம் பந்து போல் மேலே எழும்பி வரும்.வந்தவுடன் உடனடியாக அதை திருப்பி விட்டு,முறுகவிடாமல் வெள்ளையாக எடுத்து விட வேண்டும்.
   சேர்மானம்[RATIO]சரியாக இருந்தால், பணியாரம் மாவில்லாமல், தும்பைப்பூ போல் வெள்ளையாக,பஞ்சு போல் மிருதுவாக வரும்.இதற்கு ஏற்ற சைட் டிஷ் மிளகாய்த் துவையல்.
மிளகாய் துவையல்:
வர மிளகாய்——-6-8
சி.வெங்காயம்—–1கப்
புளி——-நெல்லிக்காய் அளவு
தக்காளி—-1-2
உப்பு —தேவையான அளவு.
செய்முறை:
அனைத்தையும் அப்படியே மிக்சியில் போட்டு அரைக்கவும்.அல்லது கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து ,வதக்கியும் அரைக்கலாம்.சுவையாக 
இருக்கும்.
                                                                                                  diet-B

Advertisements