தன்னந்தனி அறையில்
 உன் நினைவுகளோடு புரண்டு
விடிய விடியத் தூங்காமல்
கவிதை கிறுக்கச் சொன்னது
யாரென்று கேட்கிறாய்?

தரிசல் மண்ணாய் இருந்த மண்
நீ நடந்து வரும் வழியானபின்
இத்தனை பூ பூக்கச் சொன்னது
மட்டும் யாராம் ?

புகைப்படம் & கவிதை : அபி

Advertisements