தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி——-3படி
உளுந்து————–1படி
பச்சை அரிசியை நன்றாக களைந்து காய வைக்கவும்.உளுந்தை நிறம் மாறாமல்,சிவந்து விடாமல் லேசாக வறுத்து வைத்துக் கொண்டு,இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து திரித்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

பிறகு தேவையான மாவுடன்,உப்பு,சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து,தண்ணீர் ஊற்றி வெண்ணெய் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.[தேங்காய் பால் ஊற்றியும் பிசையலாம்.தே.பாலை வெதுவெதுப்பாக சுட வைத்துக் கொள்ளவும்].இரும்பு இருப்புச் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ,தேன்குழல் அச்சில் மாவை வைத்து பிழிய வேண்டியது தான்.சிவக்காமல் ,ந்ல்ல வெள்ளையாக வரும்.எங்க பக்கம் ஒரு கட்டைக்கு ஒரு தேங்குழல் வீதம் பிழிந்து .பெண்ணுக்கு தலை தீபாவளிக்கு 501,1001-ன்னு கொடுத்து விடுவாங்க[சம்மந்தி வீட்டுக்கு].

diet-b

Advertisements