சின்னவளாயிருந்தேன்….
பின்னலில் கட்டியிருந்த ரிப்பன் ஒன்று தொலைந்தது..
பின்னலே தொலைந்தது போல் பதறினேன்..
துடித்தழுதேன்!
வேறு ரிப்பன் வாங்கிய பின்,
ஆறிவிட்டதென் அழுகை.

கண்ணாடி அணிந்திருந்தேன்,
பல காலம்!
உறுப்புகளில் ஒன்றாய் இருந்தது அது எனக்கு!
தொலைந்து அது போனால்..
அதனோடே போகும் என்னுயிரின் ஒரு துளியும்!

வழமையே போல்…
புதியதில் மறப்பேன் பழயதை…

கைப்பை,
கடியாரம்,
குடை..
என்று…..
அந்தப் பட்டியல் நீளும் பலவாறு!

தொலைந்ததை மறக்கச் செய்யும்…
புதிய ஒன்று எப்போதும் கிடைத்தால்…

கவிதைகள் எழுதும்…
கிறுக்கு,
பிடித்திருக்குமா ,
இன்று..
எனக்கு?
…ஷஹி..

Advertisements