தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி—–2உழக்கு
பொட்டுக்கடலை–1உழக்கு
வெண்ணை[அ]டால்டா–2tbsp
உப்பு—-தேவைக்கேற்ப
மிளகாய் தூள்–1tsp
செய்முறை:
*அரிசியை நன்றாக ஊறவைத்து ,கிரைன்டரில் போட்டு கெட்டியாகவும்,மிருதுவாகவும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
*பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு சன்னமாக நுணுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
*அரிசி மாவையும்,பொட்டுக்கடலை மாவையும் ஒன்றாக கலந்து,1tsp மிளகாய் தூள், தேவையான உப்பையும்,டால்டாவையும் போட்டு வெண்ணெய் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
*இருப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும்,ஓலைப்பக்கோடா அச்சை கட்டையில் போட்டு மாவை வைத்து பிழிய வேண்டியது தான்.

சாப்பிடுவதற்கு மிகச் சுவையாகவும்,மிருதுவாகவும் இருக்கும்.
diet-b

Advertisements