தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி—–1படி
வெல்லம்———1படி[வெல்லத்தை உடைத்து அளந்து கொள்ள வேண்டும்]
தண்ணீர்———–200மிலி
நெய்—————-200-250கிராம்

செய்முறை:

*அரிசியை நன்றாக களைந்து ஊறவைக்கவும்.இரண்டு மணி நேரம் கழித்து அரிசியை நிழலில் உலர்த்தவும்.அரிசியில் ஈரப்பதம் இருக்கும் பொழுதே அதை இடித்து,சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.[மிக்சியிலோ,மிஷினிலோ அல்லது உரலிலோ இடித்துக் கொள்ளவும்].
*வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும்,அதனை நன்றாக வடிகட்டி வேறு அடிக்கனமான பாத்திரத்தில் மாற்றி கொதிக்க விடவும்.
*பாகு ஒரு கம்பிப்பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
*பிறகு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து,கட்டி படாமல் கிண்டவும்.
*மாவு நன்றாக வெந்ததும் நெய்யை ஊற்றி இறக்க வேண்டியது தான்.
*ஆறியவுடன் ,வெள்ளை துணியால் மூடி கட்டி விட வேண்டும்.

*இரண்டு நாள் கழித்து ,சிறு உருண்டையாக உருட்டி,தட்டி எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டியது தான்.

                                                                                                                    diet b

Advertisements