தேவையான பொருட்கள்:
*4 உழக்கு பச்சை அரிசி மாவு[களைந்து காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.]
*1 1/4 உழக்கு உளுந்து மாவு[லேசாக வறுத்து அரைத்தது].
*1 தேங்காய்-பால் எடுத்து வைதுக் கொள்ளவும்.
*உப்பு தேவையான அளவு.
செய்முறை:
*பச்சை அரிசி மாவை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
*பிறகு ப.அரிசி மாவையும்,உளுந்து மாவையும் ஒன்றாக கொட்டி ,உப்பு போட்டு தேங்காய் பால் ஊற்றி பிசையவும்.[தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சுட வைத்துக் கொள்ளவும்].
*சீப்பு சீடை அச்சை கட்டையில் போட்டு பேப்பரில் பிழிந்து விடவும்.பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி,கையில் எடுத்து ஒட்டி எண்ணையில் போட்டு  பொறித்து எடுக்கவும்.

*சீப்பு சீடை மிக ருசியாக, இருக்கும்..

diet-b

Advertisements