மாவுருண்டை மாவு – தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு-1கி
ப.அரிசி-200gm
சீனி-1கி
பாசிப் பருப்பையும், அரிசியையும் வாசம் வரும் வரை நன்கு வறுக்க வேண்டும். சிவக்காமல் கருகாமல் வறுக்கவும். பாசிப்பருப்பு, அரிசி கலவையையும், சீனியையும் மிஷினில் கொடுத்து தனித்தனியாக திரித்து வைத்துகொள்ள வேண்டும்.
செய்முறை
மாவுருண்டை மாவு-2 உழக்கு
திரித்த சீனி-2 உழக்கு
இனிப்பு குறைவாக வேண்டும் என்றால் சீனியைக் குறைத்துக் கொள்ளலாம்.
நெய்-200-250ml
*இரண்டு மாவையும் ஒன்றாக கொட்டி கலந்துக் கொள்ளவும்.
*நெய்யை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
*கொதிக்கும் நெய்யை மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் மாவைக் கிண்டி       உருண்டையாக பிடிக்க வேண்டியது தான்.

*மாவு சூடாக இருந்தால் தான் உருண்டையாக பிடிக்க வரும்.
*பச்சை பயறையும் திரித்து உருண்டையாக பிடிக்கலாம்.பார்க்கவும் அழகாக இருக்கும்!சத்தும் அதிகம்.
                                                                                                     diet-b

Advertisements