ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதுதான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாக். வழக்கமாக தன் முந்தைய படத்தின் வெற்றி விழாவில் ரஜினி கைகாட்டும் நபர்தான் ரஜினி படத்தின் இயக்குநராய் இருப்பார். ரஜினி இமயமலைக்கு போய்வந்தபின் அவர்முன் ப்ல ஸ்க்ரிப்டுகள் தயாராய் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி வழக்கமாய் தன் அடுத்த படத்தின் தயாரிப்பாளரைத்தான் வழக்கமாய் முதலில் தேர்வு செய்வார். இந்த முறையும் ரஜினி கிட்டத்தட்ட தன் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் என்பதை முடிவெடுத்து விட்டார். சத்யா மூவீஸ் ரஜினியுடன் இணைந்து வெளியிட்ட பாட்ஷா படம் சூப்பர் ஹிட். அதே போல் ஒரு அதிரடி படம் கொடுக்க நினைக்கிறார் ஆர்.எம்.வீ… ஆனால் இன்னும் சிலரும் களத்தில் இருக்கின்றனர்…ரஜினியின் முன் வைக்கப்பட்டுள்ள ஸ்கிரிப்டுகள்:

1. பாட்ஷா 2 : ரஜினி ஒரு டானாக கலக்கிய படத்தின் இரண்டாம் பகுதி… அநேகமாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கலாம். கதைப்படி ரஜினிக்கு இதில் டபுள் ரோல். ஒன்று மீனா இன்னொன்று இன்னும் முடிவாகவில்லை….ஆனால் ரஜினிக்கு இன்னும் ஸ்கிரிப்ட் முழு திருப்தி தரவில்லை… பாட்ஷாவின் பவர் ஸ்க்ரிப்டில் இல்லை என்றே ரஜினி ஃபீல் பண்ணுகிறார்.

2. சந்திரமுகி பார்ட் டூ : இது வாசுவின் ப்ராஜக்ட். ஏற்கனவே சந்திரமுகியே கன்னட படத்தின் உல்டாதான். இப்போது கன்னடத்தில் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் சக்கை போடு போட்டது. அதனால் தமிழிலும் இதை எடுக்க வாசு முடுவு செய்துவிட்டார். ஆனால் ரஜினிக்காக வெயிட்டிங்க்… ரஜினியோ இன்னும் யோசனையில்…

3. ஷங்கரின் மூன்றாவது கதை ; ஏற்கனவே ஷங்கர் ரஜினியிடம் சொல்லி நிராகரிக்கப்பட்ட ஒரு கதை. இது ஒரு “ஹன்ஸ்பேக்” “கூன்முதுகுடைவன்” பற்றிய த்ரில்லர் கதை. பலவித மாடர்ன் யுத்திகளில் படமாக்கப்படவேண்டிய ஒரு ஹைடெக் ஷங்கர் மசாலா… ஷங்கரின் மீது ரஜினுக்கு இருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கை… தனிப்பட்ட முறையில் அவருக்கு இந்த கதை பிடிக்கவில்லையென்றாலும் ஓ.கே சொல்ல வைக்கலாம்… ஆனால் மைனஸ் பாயின்ட்… இதை சத்யா மூவீஸ் பட்ஜெட்டில் எடுக்க முடியாது… மீண்டும் சன் கதவை தட்ட வேண்டி வரலாம்..

4. முருகதாஸ் : கஜினி முருகதாஸ் ஒரு அட்டகாசமான ஸ்கிரிப்டோடு ஆமிர்கானை எல்லாம் விட்டுவிட்டு ரஜினிக்காக காத்திருக்கிறார். ரஜினியின் பார்வைக்கு இன்னமும் இந்த ஸ்க்ரிப்ட் போகவில்லை. இதுவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் எடுக்க வேண்டிய ப்ராஜக்ட்..

ஆக “சுல்தான் த வாரியர்” முடியும் முன்பே எந்திரன் வெற்றி விழாவில் அறிவுப்பு வரலாம். கோடம்பாக்க தகவல்படி பாட்ஷாவே இப்போது முன்னிலையில்…

Advertisements