இங்கிலாந்தில் ஓட்ஸ் தான் குதிரைக்கான உணவு!!!ஓட்ஸ் ஏழைகளின் உணவு என்று ஒரு கூற்று உண்டு.ஆனால் இந்தக் கதையெல்லாம் மலை ஏறி விட்டது.இப்பொழுது ஓட்ஸின் ரேஞ்சே வேறு.தற்போதைய ஆய்வு முடிவுகள்,ஓட்ஸ்க்கு கொழுப்பைக் குறைக்கும் தன்மை இருப்பதாக கூறுகிறது.அத்துடன் மட்டுமில்லாமல் ஓட்ஸில் கணிசமான அளவு புரதம்,பொட்டாஷியம்,மக்னீஷியம்,பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,காப்பர்,போன்ற நம் உடலுக்கு தேவையான தாது உப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.மிக முக்கியமாக ஓட்ஸில்  கரையும் தன்மையுள்ள நார்ச்சத்து [soluble fibres]அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.இந்த soluble fibre-ன் பெயர் பீட்டா குளுகான்[soluble fibre called BETA-GLUCON]இது தான் கொலஸ்டீராலை குறைக்கிறது.நம் உடம்பில் உள்ள 1% கொலஸ்டீரால் குறைந்தால்,இதய நோய்[HEART ATTACK]வருவதற்கான வாய்ப்பு 2% குறைகிறது.

தினமும் கணிசமான அளவு ஒட்ஸை நம் உணவில் சேர்த்துக் கொண்டால்…….,

*ரத்த அழுத்தம் சீராக இருக்கும்,

*சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கலாம்,

*புற்று நோயை தவிர்க்கலாம்,

*மலச்சிக்களுக்கு bye சொல்லலாம்,

*ரத்த குழாய்களில் கொழுப்பு படியாமல் ,பாதுகாத்து அடப்பை தவிர்க்கலாம்,

*கொலஸ்டீராலை குறைத்து HEART ATTACK-க்கு, தடா போடலாம்.

2 கப் ஓட்ஸில் 4-5.5%SOLUBLE FIBRE இருக்கிறது.5-7%SOLUBLE FIBRE  நம் ரத்தத்தில் உள்ள LOW DENSITY LIPOPROTEIN -[LDL]அதாவது கெட்ட கொலஸ்டீராலை 5% குறைக்கிறது.தினமும் 30-45 நிமிட உடற் பயிற்சியுடன் 2 கப் ஓட்ஸ் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமாக இருக்கலாம்.

SO!!!தினமும் ஓட்ஸ் சாப்பிடுங்க !!! HEALTHY யா இருங்க!!!

diet-b

Advertisements