manmadan ambu

கமலஹாசன் மன்மதன் அம்பு படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். படத்தில் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் நிஷா.. ஒரு நடிகை … அவர் விரக்தியில் பாடுவதைப் போல இந்தப் பாடல் வருகிறது…

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்

களங்கம் உள்ளவள் எச்சரிக்கை!

உடனே கையுடன் கைகோர்த்தாளா?

ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை!

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறும் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினாளாயின்

காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னனும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச்செயலில்

காதல் கலவாது காத்துக்கொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை

இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள் !


manmadan ambu kamal

இந்த வரிகள் எல்லாம் புதுமையாகவும் கொஞ்சம் துணிச்சலாகவுமே இருக்கின்றன… காமத்தைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் இப்படி யாராவது இதுவரை துணிச்சலாக எழுதியிருக்கிறார்களா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்… இதற்கான விமர்சனங்கள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை!

Advertisements