manmadan ambu kamal

மன்மதன் அம்பு படத்தில் கமலஹாசனின் பாடல் வரிகள் பார்த்து கொதித்தெழுந்து விட்டேன்! என்னதான் கதையின் சூழலாக இருந்தாலும் சற்று அதிகப்படியான வார்த்தையாடல் தான். பெண்களை இவ்வளவுக்கு தரம் தாழ்த்தி எழுத என்ன அவசியம்? யாரோ ஒரு பெண்ணைக் குறிப்பிட்டுச்  சாடுவது போல் வார்த்தைகளை அமைதிருக்கலாமே? எத்தனை பெரிய ரீச் உள்ள நடிகர் கமல்? சும்மாவே பெண்களை வம்புக்கிழுக்கும் பேர்களுக்கு இது ரொம்பவும் இடம் கொடுத்தார் போல் ஆகிவிடாதா? சற்று சமூகப் பொறுப்போடு எழுதியிருக்கலாமே? (என்னமோ போங்க சார்)இவர் மட்டும் தான் எழுதுவாரா? இதோ நானும் அவர் பாடலை ஒட்டி, வெட்டி எழுதி இருக்கிறேன். பெண்களுக்கு அறிவுறையாக (ஆணும் பெண்ணும் இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தால் உலகம் உருப்படும்!)

பெண்ணேஉனக்கு…

கண்கள் பார்க்கும் திடம் அது கெட்டு;
கண்ட இடம் பார்க்கும் பார்வை முறி…
கைகள் கோர்ப்பது கலவிக்கழைப்பென
நினைக்கும் ஆணின் மூடம் அறி!

ஆடை தொட்டால்..
அயோகியனென்று அலறிப் பதறு..
அவன் அன்பை உதறு!

அன்பில் உருகி அனுமதியாதே

நடிக்கப் பழகு,நயங்கள் அழகு!
காதல் வருமுன் கலவிக்கழைத்தால்
கயவன் பெண்ணே எச்சரிக்கை!
கவிதை இலக்கியம் புரியாதென்றால்
காட்டுப் பயல் அவன் எச்சரிக்கை!

உடனிருப்பது சுகமென்று மதியான்..
உன்னைக் கைகழுவி விடுவான் ..எச்சரிக்கை!
அறிவிலான்,கன்ணியமிலான்
அவனுடன் காதல்,
அறவே கொள்ளேல் எச்சரிக்கை!

காதலில் கணக்குப் பார்ப்பவனிடத்து
கன்ணையும் பதிப்பது
பாவமெனக் கொள்!
பின்னை வருவதை முன்னமே அறிந்து
பித்தர்கள் பக்கம் சாயாதிருந்து கொள்!
உலகத்தராசின் உன்னதம் காக்கும் ,
எடைக்கற்கள் ஆண்,பெண் எனக்கொள்!
பெண்ணே நீயும் கற்பெனும் திரை அணிந்து
காமுகர் முகத்திரை கிழிக்கும் உறுதி கொள்!

….ஷஹி…